திமுக அரசு வந்த பிறகு இந்து அறநிலைய துறை செயல்பாடாத துறையாகவும், இந்து மக்களுக்கே எதிரானதாகவும் உள்ளது என மக்கள் குமுறி வருகிறார்கள். மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்களில் மட்டும் தலையிட்டு பல்வேறு விதிகளை விதிக்கிறது என்ற குற்றசாட்டு உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் பழனி தைப்பூச திருவிழா வருகின்ற 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 25 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி கிரிவலப் பாதையில் வந்து படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் முயன்ற போது கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பழனி கோவிலில் பணிபுரியும் நாதஸ்வர, தவில் ஊழியர்களை தவிர வேறு நபர்கள் நாதஸ்வரம், மேளம் அடித்து மலைக்கோவிலுக்கு வர அனுமதி இல்லைபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு வந்தால் அவை உண்டியலில் போடப்படும் என்று கோயில் நிர்வாகம் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஏதோ பக்தர்களை மிரட்டுவது போல அதிகாரத் தொணியில் இதுபோல ரூல்ஸ் போட யார் அதிகாரம் தந்தது என பக்தர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூல்ஸ் ஒன்றும் சர்ச்சையாகி உள்ளது. அதில், “பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதியின்றி செல்போன் கொண்டு வந்தால் பக்தர்களிடம் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்” என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்று அப்படி செல்போன் கொண்டு வந்த ஒருவரிடம் இருந்து ரூ.500 அபராதம் இன்று வசூலிக்கப்பட்டது. இதனிடையே, அவர் கோயில் நிர்வாகத்திடம் ஈடுபட்டார். அப்போது, 500 ரூபாய் அபராதம் கொடுக்கவில்லை என்றால் செல்போனை பிடுங்கி உண்டியலில் போடுவோம் என கோயில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
முன்னதாக, பழனி முருகன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் வரக்கூடாது என்றும், இதை கோயில் ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், அப்படி செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.