என் தாத்தா வீட்டில் நிறைய பலா மரம் இருந்ததால் பழத்தின் பக்குவம் அறிய ஓரளவு தெரியும் ! தெரிந்ததை சொல்கிறேன் வாங்கி அரிந்து அறிந்ததை அறிந்து கொள்ளலாம்.
எந்த பழம் காய்கள் நம் உடலில் உள்ள எந்த உறுப்புகள் போல் உள்ளதோ அதில் வரும் பிரச்சினைகளை அதுவே சரி செய்யும் இது தான் இயற்கை விதி.
கல்லீரல் மண்ணீரல் கணையம் குடல் பகுதி எல்லாம் சேர்ந்து ஒரு ஒரு அமைப்பு போல் தான் பலாப்பழம் இங்கு உள்ள உடல் பிரச்சினை களை சரி செய்ய பலாப்பழம் தான் மருந்து.
ஆங்கில மருத்து என்று நம் வாழ்க்கை முறை என்று வந்ததோ அப்போது முதல் பிரச்சினைகள் தான்
முக்கனிகளில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இதை சாப்பிட பலருக்கு பயம் அதுவும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தொடவே மாட்டார்கள்.
தைராய்டு சுரப்பியை சரி செய்ய பலாப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது குடல் புற்றுநோய் ரத்தசோகை தோல் சுருக்கம் மலச்சிக்கல் ஆஸ்டியோபொராலிஸ் என்ற எலும்பு நோய் வராமல் தடுக்க பலாப்பழம் சாப்பிடலாம். சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
100 கிராம் பழத்தில் 397 கலோரி ஆற்றல் உள்ளது கார்போஹைட்ரேட் இனிப்பு நார்சத்து கொழும்பு (0.64 ) புரதம் என்று உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன கால்சியம் இரும்பு மக்னீசியம் மாங்கனீசு பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் துத்தநாகம் நீர் என் அனைத்து உடலுக்கு தேவையான பொருட்கள் அடங்கி பழம் பீட்டா கரோட்டின் தயமின் ரிபோபிளாவின் நியாசின் பான்டோ தெனிக் அமிலம் வைட்டமின் பி 6 பி 9 பி விட்டமின் சி விட்டமின் ஈ என ஒரு பெரிய பட்டியல் உள்ளது.
பி டைம் சுகர் வராமல் தடுக்க பலாப்பழம் சாப்பிடலாம்.
உலக அளவில் மா பலா வாழை ஏற்றுமதியில் இந்தியா தான் முன்னணி .பலாப்பழம் கொட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது பலா பிஞ்சு மை பலாமூசு என்று சொல்லி மூசு முதல் பலா தோல் பெக்டின் கூழ் செய்து புகையிலை பதனிட பயன் படுகிறது ( புகையிலை பறித்து பதனிட பெரிய பள்ளம் தோண்டி அதில் வைத்து தான் பதனிடும் தொழில் நுட்பம் நடக்கும்)
பழத்தின் மூர்த்தி :
பழம் வாங்கும் முன் அதன் மேற்புறம் உள்ள முட்கள் நன்றாக விரிவடைந்து இருக்க வேண்டும் காய் முற்றிய பக்குவம் வரும் போது முள் முழுமையாக விரியும் அது தான் பழத்தின் சுவைக்கு முக்கியம்.
பழத்தை விரலால் அமுக்கி பார்த்தால் இலேசாக அமுக்கும் பழத்தை முகர்ந்து பார்த்தால் வாசம் அடிக்கும் அதை கவனிக்க முடியவில்லை என்றால் கத்தியை பழத்தின் ஒரு புறத்தில் உள்ளே குத்தி எடுக்கும் போது பழுத்த பழம் என்றால் அதில் பால் அதிகம் ஒட்டாது கத்தியை முகர்ந்து பார்த்தால் பழம் வாசம் தெரியும் அதையும் கவனிக்க வில்லை என்றால் பழத்தில் கிண்ணம் போட்டு செக் செய்யலாம் சிறிய அளவில் ஒரு பிஸ் வெட்டுவார்கள் அதில் பால் நூலாக வந்தால் காய் அதில் பால் தயிர் திரிந்தது போல் வந்தால் பழம் பக்குவம் வந்து விட்டது என்று கணக்கு .
(பால் தெளிந்து விட்டது என்று சொல்வோம் ) அதில் ஒரு சுளையையும் ஒரு கொட்டை எடுத்த உடன் பலாக்கொட்டை தோல் காய்ந்து ஈரம் இல்லாமல் இருந்தால் பழம் முழு பக்குவம் அடைந்து விட்டது என்று கணக்கு. பலா கொட்டை கையில் பட்ட உடன் வளவளப்பாக இருந்தால் பழம் பக்குவம் இல்லாத வெம்பல் பழம் என்று கணக்கு அதை வாங்க கூடாது பழுத்து இருந்தாலும் பழம் ருசி இருக்காது .
பலாப்பழம் காம்பில் முதல் இரண்டு சுற்றுகள் உள்ள முட்களை எண்ணி ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள சுளைகள் அதுவே. (விடை சரி இல்லை என்றால் பழம் சரியாக பாடம் படிக்க வில்லை என்று கணக்கு)
பழம் நறுக்கிய உடன் வெளி வரும் பாலை ஒரு ஈர காகிதம் கொண்டு துடைத்தால் பால் இல்லாமல் சுளை எடுக்கலாம் கத்தியில் உள்ள பால் போக கத்தியை கடலில் காட்டி காகிதம் கொண்டு துடைத்தால் கத்தி பளிச் என்று இருக்கும்.
நம் ஊரில் விளையும் பழங்களை அதன் பருவ காலங்களில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
போன் வருடம் கோவில் காரணமாக பலாப்பழம் வாங்கவே இல்லை இந்த வருடம் என்னவாகும் என்று தெரியவில்லை.
எனக்கு பலாப்பழம் பிடிக்கும் ரொம்ப சாப்பிட மாட்டேன் ஒரு வேளைக்கு ஒரே ஒரு பழம் மட்டுமேஉணவு