தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அறிவித்திட, தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கோரிக்கை…
பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழா. அதிலும் குறிப்பாக தமிழ் கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அப்படி இருக்கையில் அந்த நாளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் தேர்வு அறிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஜனவரியில் பட்டைய கணக்காளர் (C.A. Foundation Exam) அடிப்படை தேர்வை பொங்கல் அன்று அந்த தேர்வை நடத்தும் நிறுவனம் அறிவித்ததை ஆளும் திமுக உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பல லட்சம் மாணவர்கள் எழுதும் தேர்வு. தமிழகம் முழுவதும் நடைபெறும் தேர்வு. அதிலும் அறிவியல் தேர்வு என்பது மருத்துவம் படிக்க ஆர்வமுடைய மாணவர்களுக்கு முக்கியமான தேர்வு ஆகும்.
ஊர் முழுவதும் திருவிழா கோலகலமாக இருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
எனவே தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அறிவித்திட கேட்டுக் கொள்கிறோம்…