1968 முதல் 206 வரை பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா வாங்கிய மொத்த பதக்கங்களை, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கபட்டியல் முறியடித்தது.
பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கின.ஜப்பான் தலை நகர் டோக்கியோ நடைபெற்றது இதில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர். சுமார் 2 வார காலம் நடந்த பாராலிம்பிக், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தது.
இந்தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24-வதுஇடம் பிடித்தது. பாராலிம்பிக் வரலாற்றில் 1968 முதல் இந்தியா பங்கேற்று வருகிறது.
கடந்த 2016-ம்ஆண்டு பாராலிம்பிக் வரை மொத்தமாக 12 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், முதல்முறையாக டோக்கியோவில் இம்முறை 19 பதக்கங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் தலைமையில் புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா அணி.
மோடியின் அரசாங்கம் விளையாட்டு துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறது’ பாராலிம்பிக் வரலாற்று சாதனை படைத்த இந்தியா:மோடியின் புதிய இந்தியாவில் திறமைக்கு மரியாதை!
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் முன்னாள் அரசாங்கம் மாதிரி இல்லாமல் வீரர்களுடன் கலந்துரையாடல் அவர்களுக்கு மரியாதை செலுத்துதல் அவர்கள் தேவையை பூர்த்தி செய்தல் என மோடி அரசாங்கம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் குவித்த இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவில்,
‘‘ இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ #Paralympics-க்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும் மற்றும் பல தலைமுறை விளையாட்டு வீரர்கள், விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று.
இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன. இதற்காக விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் நமது வெற்றிகள் அதிக பங்கேற்பை உறுதி செய்யும் என நம்புகிறோம்.
நான் முன்பு கூறியது போல், ஜப்பான், குறிப்பாக டோக்கியோ மக்கள் மற்றும் ஜப்பான் அரசு, தனித்துவமான விருந்தோம்பல், முக்கிய விஷயங்களை கவனித்தது, அதிகம் தேவையான மீள் தகவல்களை பரப்பியது, இந்த ஒலிம்பிக் மூலம் ஒன்றாக இருந்தது ஆகியவற்றுக்காக பாராட்டப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.