கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது.
- பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
- வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.
- ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.
இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.