பா.சிதம்பரத்தால் சிக்கி தவிக்கும் Yes Bank

யெஸ் பேங்க்…

ரானா கபூர் (Rana Kapoor) மற்றும் அஷோக் கபூர் (Ashok Kapur) ஆகிய இருவரால் 2003இல் உருவாக்கப்பட்ட தனியார் வங்கியான யெஸ் பேங்கின் (YES Bank) இன்றைய சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி. 18 ஆயிரம் பேர் பணி புரியும் வங்கி. இந்தியாவின் 4ஆவது பெரிய வங்கி.

2008 9/11 பயங்கரவாதிகள் தாக்குதலில் அஷோக் கபூர் உயிரிழந்தார்.

அஷோக் கபூர் இருந்தவரை ஒழுங்காக இருந்த யெஸ் பேங்க், அவர் மறைந்த பின் ரானா கபூர் ஆதிக்கத்தில் 2008இலிருந்து – காங்கிரஸ் ப.சி சகவாசத்தால் – பலருக்கும் கடன் வழங்க துவங்கியது.

பிரபலமானார் ரானா கபூர். ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடின ரானா கபூரை. பாலிவுட், கிரிக்கெட், காங்கிரஸ் கூட்டத்துக்கு நெருக்கமானார் ரானா கபூர். (அத்தனையும் தாவூத் இப்ராஹிம் கூட்டம்).

ரானா கபூர் தலைமையில் யெஸ் பேங்கிலிருந்து கடன் பெற்ற அனில் அம்பானி, டி ஹெச் எஃப் எல், ஜெட் ஏர்வேஸ், கஃபே காஃபி டே என அத்தனை நிறுவனங்களும் திவால் நிலைமைக்கு செல்ல, கடனை யெஸ் பேங்குக்கு திருப்பி தர இயலவில்லை.

யுபிஏ தொடர்ந்திருந்தால், மக்கள் வரிப்பணத்தை போட்டு இந்த வாராக்கடன்களை அடைத்து யெஸ் பேங்கை காப்பாற்றி, அதோடு கடன் வாங்கியவர்கள் கடனையும் தள்ளுபடி செய்திருப்பார்கள் – கடன் வாங்கியவர்கள் காங்கிரசுக்கு ஒரு ‘கட்’ கொடுத்திருப்பார்கள். யெஸ் பேங்கும் கடன் வாங்கியவர்களும், காங்கிரசும் ஹேப்பி – வரிப்பணத்தை இப்படி காவு கொடுத்த மக்களுக்கு சோகம்.

ரானா கபூரின் போதாத காலம் 2014 முதல் மத்தியில் மோதி அரசு அமைந்தது. யுபிஏ காலத்து டகால்டி வேலை செல்லவில்லை.

யெஸ் பேங்கின் வாராக்கடன் (சுமை) ரூ 35 ஆயிரம் கோடிக்கு மேல். ரிசர்வ் வங்கி வகுத்த 8% இருக்க வேண்டிய வங்கியின் மூலதன விகிதம் 8.7% ஆனது.

2017 முதல் யெஸ் பேங்க் நடவடிக்கைகளை தொடர்ந்து தலியிட தொடங்கியது ரிசர்வ் வங்கி. அபராதங்கள் விதித்தது, 2018இல் ரானா கபூரை நீக்கியது, புதிய தலைமை நிர்வாகியை நியமிக்க வைத்தது.

யெஸ் பேங்க் நிர்வாகமோ, “இன்னும் கொஞ்சம் அவகாசம் தரவும். புதிய முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறோம்” என்றது ரிசர்வ் வங்கியிடம்.

ரிசர்வ் வங்கி 2019இல் பலமுறை (ஒரு கோடி ரூபாய்) அபராதம் விதித்தது யெஸ் பேங்க் மீது.

பங்கு பரிவர்த்தனையின் செபியும் யெஸ் பேங்க் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

ஒவ்வொருவராக நிர்வாகிகள் யெஸ் பேங்கை விட்டு விலக ஆரம்பித்தனர்.

வாராக்கடன்களாலும் நஷ்டங்களாலும் சிக்கலில் இருந்தது யெஸ் பேங்கில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்கினர்.

வங்கியை நடத்த முடியாத நிலை. (3 லட்சம் கோடி சொத்தை போர்ட் ஆஃப் டைரக்டர்கள் இஷ்டப்படி கை வைக்க முடியாது).

வியாழனன்று யெஸ் பேங்க்கின் நிர்வாகத்தை தன் கையிலெடுத்துக் கொண்டது RBI. அதோடு, யெஸ் பேங்க் நிர்வாகிகள் அத்தனை பேரையும் இடை நீக்கம் செய்தது.

‘இப்போதைக்கு ஏடிஎம் மூலம் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்துக்கு உத்தரவாதம் தருகிறோம்.

வங்கி மூடப்படாது, வங்கி ஊழியர்கள் அடுத்த ஒரு வருடத்துக்கு சம்பளம் உண்டு’ போன்ற உத்தரவாதங்களை தந்தது RBI. யெஸ் பேங்க் RBI பொறுப்பில் வந்தது.

யெஸ் பேங்க்கை RBI தன் கையிலெடுத்ததற்கான காரணங்கள்: வங்கியில் நிர்வாக முறைகேடுகள், வாராக் கடன்களால் பிரச்சினை (asset quality), அதிகப்படி முதலீட்டுக்காக முதலீட்டாளர்களை தேடுகிறோம் என்று சொல்லி பல காலம் நீட்டியடித்தது, வங்கியின் நிர்வாகம் மாறி ஓராண்டுக்கு பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாதது என பல.

RBI மற்றும் அரசின் தலையீட்டால், 3 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள தனியாரின் யெஸ் பேங்கை 34 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசின் SBI, இப்போதைக்கு யெஸ் பேங்கில் ரூ 2,450 கோடி முதலீடு செய்யவிருக்கிறது. ரூ 11,760 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி வரும்.

2017 – 18இல் ரூ 6,547 நஷ்டத்தில் இருந்த SBI, 2019 – 20இல் ரூ 10,000 கோடிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது. யெஸ் பேங்குக்கு SBI செய்யும் முதலீடு SBIக்கு சுமை.

இந்த முதலீட்டால், யெஸ் பேங்கின் 49% பங்குகளை SBI பெறும். மேலும் யெஸ் பேங்கின் நிர்வாகிகள் போர்டில் இரு SBI நிர்வாகிகள் இடம்பெறுவார்கள்.

இனி யெஸ் பேங்குக்கு பிரச்சினை இல்லை என்றாலும் ப சிதம்பரம் உள்ளிட்டோர் வழக்கம் போல குரல் கொடுக்கிறார்கள், “ஸ்டேட் வங்கி எப்படி இதை கையிலெடுக்கலாம்” என்று. இவர்களது நோக்கம்: 18 ஆயிரம் யெஸ் பேங்க் ஊழியர்களும் தெருவில் நிற்க வேண்டும். யெஸ் பேங்கில் கணக்கு வைத்திருந்தவர்கள் அல்லல் பட வேண்டும். மோதி, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அவப்பெயர் வர வேண்டும் என்பது.

யெஸ் பேங்க் பிரச்சினையில் இந்த ப.சி கைக்கூலிகள் – நிதி அமைச்ச செயலர்கள் அஷோக் சாவ்லா மற்றும் ஆதர்ஷ் கிஷோர் – முக்கிய பங்கு உண்டு. விசாரணையில் விவரங்கள் வரும்.

இதற்கிடையில் தாவூது இப்ராஹிமுடன் தொடர்புடைய டி ஹெச் எஃப் எல் மூலம் பண மோசடி செய்த விதத்தில் ரானா கபூரை அமலாக்க பிரிவு கைது செய்துள்ளது.

அது தவிர, ரிசர்வ் வங்கி கையிலெடுக்கும் வரை யெஸ் பேங்க் பற்றி வானளாவ புகழ்ந்து, அதன் பங்குகளில் முதலீடு செய்ய சொல்லி அட்வைஸ் செய்த சி என் பி சி உள்ளிட்ட சேனல்கள் சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். இதனால் பங்குதாரர்களுக்கு நட்டம்.

இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசித்ததையும் 2019 முதல் ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன். நிர்மலா சீதாராமனை குறை சொல்லுபவர்கள் முதலில் அந்த செய்திகளை கவனிக்க வேண்டும்.

தனியார் நிறுவனம், “நான் முதலீட்டாளர்களை தேடி வருகிறேன். என் நிறுவனத்தில் கையை வைப்பது குற்றம்” என்று சொல்லுவது அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்ற காரணத்தால் ரிசர்வ் வங்கி அவர்களுக்கு அவகாசம் தந்தது. பிரச்சினை மேலும் பெரிதாகுமுன் வங்கியை கையிலெடுத்தது.

Yes Bank Crisis: 5 Key Reasons to Know
https://www.jagranjosh.com/general-knowledge/reasons-behind-the-yes-bank-crisis-1583503237-1

YES Bank said ‘Yes’ to all bad boys of Indian banking
YES Bank news: IL&FS, Dewan Housing, Jet Airways, Cox & Kings, CG Power, Cafe Coffee Day, Altico – name a bane of Indian financial services sector and YES Bank was as a key lender
https://www.businesstoday.in/sectors/banks/yes-bank-said-yes-to-all-bad-boys-of-indian-banking/story/397659.html

YES Bank crisis: How SBI executed a perfect ‘rescue plan’.
YES Bank with over Rs 3-lakh crore assets . YES Bank’s total loan exposure is Rs 3.79 lakh crore, including both fund based and non-fund based loans.
https://www.businesstoday.in/sectors/banks/yes-bank-crisis-how-sbi-executed-a-perfect-rescue-plan/story/397777.html

Yes Bank Crisis: The Most Frequently Asked Questions Are Answered Here
https://swarajyamag.com/economy/yes-bank-crisis-the-most-frequently-asked-questions-are-answered-here

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version