மம்தா மீது மக்களுக்கு கோபம்.. மத்திய அமைச்சர் அமித்ஷா.

மேற்கு வங்க மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று போல்பூர் பகுதியில், பா.ஜ.க., சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது வாழ்க்கையில் இது போன்ற பேரணியை பார்த்தது இல்லை. இந்த பேரணியானது, பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை காட்டுகிறது.

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மம்தா மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தையும் இந்த பேரணி காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு அளியுங்கள். மாநிலத்தை மாற்றி காட்டுகிறோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version