தேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தனியார் வணிகவளாகங்கள் , சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் ஊரடங்கையொட்டி இன்று (ஞாயிறு) நாடு முழுவதும் 3,700 ரெயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில்கள், நாடு முழுவதும் 2,400 பயணிகள் ரெயில்கள் மற்றும் 1,300 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவுகள் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சர்வதேச விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

தனியார் பால் விற்பனையும் காலை 7 மணிக்கு மேல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டும் இன்று அடைக்கப்பட உள்ளது. தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

Exit mobile version