பெரியார் பேரன் பா.ஜ.க வில் இது என்னடா பெரியார் மண்ணுக்கு வந்த சோதனை ! வைரல் செய்தி

ஈரோட்டு பெரியார் நாத்திக அதாவது கடவுள் மறுப்பு கொள்கைகளில் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாத்திற்கு திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது திமுகவின் ஆட்சி காலகட்டத்தில் தான்.
திமுகவின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகறாறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என பல பேர் கிளம்பினர்.இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

இது படிப்படியாக வளர்ந்து தி.மு.கவின் அனைத்து மேடைகளிலும் மதசார்பற்ற அமைப்புகள் என்ற பெயரில் இந்துக்களை கேவலப்படுத்தி பேச ஆரம்பித்தார்கள் மதசார்பற்ற மாநாடு என்று தி.மு.க கூட்டம் போடும். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் திக கும்பல்கள் இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

இந்த நிலையில் ஈ வே ராமசாமி பேரன் பாஜகவில் இணைந்துள்ளார்.என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ! இது திமுக மற்றும் திகவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திராவிடர் கழகம் நிறுவனர் மறைந்த ஈ.வெ.இராமசாமியின் பேரன் சதிஷ், கடவுள் மறுப்பு கொள்கையை கை விட்டு ஆன்மீக சித்தாந்தம் கொண்ட பாஜகவில் இணைந்திருப்பது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் கறுப்பர் கூட்டம் தான். தமிழ்க்கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசி பெரும் சர்ச்சை உருவாக்கினார்கள்.கருப்பர் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தது, ஒரு ஆன்மிக புரட்சி ஏற்படும் அளவிற்கு கொண்டு சென்றது கந்த சஷ்டி கவசம் ! தமிழக மக்கள் அனைவரும் ஒருமித்த குரலாக வெற்றிவேல் வீரவேல் என முழங்கினார்கள். மேலும் இந்த ஆன்மீக புரட்சியை ஏற்படுத்த காரணமாக இருந்தது பாஜக இளைஞரணி. அவர்கள் தான் முதன் முதலாக கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என அறிவித்தார்கள் !

இந்த நிலையில் தான் ஈ.வெ.இராமசாமியின் பேரன் சதிஷ், கும்பகோணம் பா.ஜ.க நகரத் தலைவர் கல்கண்டு ரெங்கராஜன், தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கும்பா வெங்கடாச்சாரி மற்றும் கும்பகோணம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார் என கும்பகோணம் பா.ஜ.க புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மனநிலை மாறி வருவதும், தங்கள் கடவுள்களை இழிவு படுத்துவதையும் எதிர்த்து வீதிக்கு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருவதும் அதிகரித்து வரும் சூழலில் கடவுள் மறுப்பு என்ற கொள்கை மூலம் தினமும் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி வந்த கூட்டம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஈ வே ராமசாமி கொள்கையை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்க, அவரது வழித்தோன்றல்கள் நேர் எதிர் சித்தாந்த நிலைப்பாடு கொண்ட பாஜகவில் இணைவது இனி தமிழகம் பெரியார் மண் இல்லை என மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: TNNEWS24

Exit mobile version