முன்பதிவு செய்து கொள்ளுங்கள் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

உலகை அச்சுறுத்தி வரும் கொரானா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக அணைத்து விமானங்களையும் ரத்து செய்தது இந்திய அரசு . மேலும் 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் பேசியது : வரும் 15 ஆம் தேதிக்கு பின் சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும்.

அந்த விமானங்கள், எந்தெந்த நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு அனுமதிக்கும் என்பதை அன்றைய சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் விமான போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், ‘ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவு ரத்து செய்ய வேண்டியது வரும்’ என செய்தியாளர்களிடம் பேசினார்.

Exit mobile version