Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பெட்ரோல் வரியை சொல்லாமல் குறைத்தது மத்திய அரசு ! தேர்தலில் சொல்லியும் குறைக்காத தமிழக அரசு !

Oredesam by Oredesam
November 23, 2021
in செய்திகள், தமிழகம்
0
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்
FacebookTwitterWhatsappTelegram

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

அனைவருக்கும் வணக்கம்

ஒதுங்கக்கூட இடமின்றி ஓயாமல் பெய்யும் மழை ஒரு புறம், வடியாத மழை நீரும், பொங்கிவரும் கழிவு நீரும் மக்கள் வாழ்வை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தும் போது, ஆதரவு காட்ட வேண்டிய மாநில அரசு, மிக மந்தமான செயல்பாட்டால் தீர்வுகளுக்கு பதிலாக, பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, அல்லல் படும் மக்களுக்கு கூடுதல் இன்னலாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் வரி விகிதம் அதிகரிக்கவில்லை. மாறாக திபாவளி அன்று குறைக்கப்பட்டது.

ஆனாலும் விலையில் மாற்றம் வரக்காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலையை மாற்றவும், அதுபோல 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலையை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இன்று பெட்ரோல் விலையை தினமும் அதிகப்படுத்துவதைக் குறைகூறும் திரு.ப.சிதம்பரம் அவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில், மத்திய அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகளே இந்த விலை உயர்வுகளுக்குக் காரணம்.

இது ஒருபுறம் இருக்க, மக்களின் எண்ணத்தைப் புரிந்து நடந்து கொள்ளும் மத்திய பாஜக அரசு, கடந்த தீபாவளிப் பரிசாக, தன் வரியை பெட்ரோல் டீசலில் பெருமளவு குறைத்தது. தேர்தலில் எந்த வாக்குறுதியும் தரவில்லை, விலை குறைப்பு பற்றிய எந்த உத்திரவாதமும் தரவில்லை, ஆனாலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது.

ஆனால் இதற்கெல்லாம் நேர் மாறாக, தமிழக திமுக அரசு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், பெட்ரோலுக்கு ரூபாய் 5/-ம் டீசலுக்கு ரூ.10/-குறைப்பதாக மக்களுக்கு வாக்களித்தது. இது சாத்தியமா? என்று கேட்ட போது, மற்ற நிதி ஆதாரங்களைப் பெருக்குவதன் மூலம் இது செயல் படுத்தக் கூடய சாதாரண விஷயம் என்பது போல திமுக அரசு அலட்சியம் காட்டியது. அனால் ஆட்சிக்கு வந்தவுடன், பொருளாதரம் பேசி, முக்கியமாகத் கடந்த தேர்தலில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை மாநில அரசு குறைக்கவில்லை.

மத்திய அரசு தன் செஸ் வரியைக் குறைத்த, அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், அதிலும் குறிப்பாக NDA கூட்டணி / பாஜக ஆட்சி நடைபெறாத பல மாநிலங்களில் கூட அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து, பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு அந்தந்த மாநில அரசு, வெகுவாகக் குறைத்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழகத்திற்குள்ளாக அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தை விட மிகக் குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. காரணம், பாரதப் பிரதமர் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் உடனே மாநில வாட் வரியை குறைத்தார்கள்.
தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நம் பாஜகவினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில அரசின் வாட் வரியை குறைக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என நம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மாநில திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு பாஜக இன்று (22ஆம் தேதி) முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என்று நான் அறிவித்திருக்கிறேன். இன்று மாநிலம் முழுவதும் நம் பாஜகவினர், மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். அனைத்து அணி, பிரிவு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் மாநில அரசைக் கண்டித்து இந்தப் பெட்ரோல் / டீசல் வாட்வரி குறைப்புப் போராட்டத்தைச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுகிறேன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

கொரோனா குறித்து மத்திய சுகாதாரத்துறை செய்திகள் சில…

May 13, 2021

Your Favorite Home Cook Needs One of These Fun Gifts

December 21, 2019
55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

October 15, 2020
Annamalai IPS

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! தி.மு.க வை எச்சரித்த அண்ணாமலை!.

June 24, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x