உத்திரபிரதேசம் எனும் பெரும் மாநிலம் யோகி எனும் சன்னியாசியால் எழும்பி நிற்க, விஜயன் எனும் கம்யூனிச முதல்வரால் கேரளாவின் நிலை ?

இருபது கோடி மக்களை கொண்ட மிகபெரும் மாநிலமான, அடிப்படை வசதிகளற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தில் யாரும் எதிர்பாரா மாயத்தை செய்து இயல்பு நிலமையினை மீட்டு எடுத்திருக்கின்றார் ஒரு காவி சன்னியாசிஆம், உபியில் நடந்திருப்பது மாபெரும் ஆச்சரியம். இந்தியாவின் கொரோனா கால அச்சுறுத்தலாக பார்க்கபட்ட மாநிலம் அது.

ஆனால் அந்த யோகி அசத்தியிருக்கின்றார் வெகு குறுகிய கால முடக்கத்துக்கு பின் மாநிலம் சுத்தமாக மீண்டெழுந்திருக்கின்றது, பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கபட்ட முதல் மாகாணமாக அதுதான் விளங்குகின்றது.இன்று இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே மிக அதிசயமாக உற்றுநோக்கபடும் நபராக அவர்தான் விளங்குகின்றார், அவரால்தான் சுமார் 1500 ஆண்டுக்கு பின்பு அந்த கங்கை நதி தீரம் மெல்ல ஒளிவீச துவங்கியிருக்கின்றது.

Annamalai Mass Speech ! பா.ஜ.க சார்பில்  ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்! அதிரடி காட்டிய அண்ணாமலை!

ஆனால்,இந்தியாவிலே அதிகம் படித்தவர் உள்ள மாநிலம், வெறும் 3 கோடி பேர் உள்ள மாநிலமான கேரளா கடும் சிக்கலில் உள்ளதுநிச்சயம் கேரள மக்களிடம் சிக்கல் இல்லை ஆனால் ஆளும் கம்யூனிச அரசாங்கத்தின் இம்சை இது, கம்யூனிஸ்டுகள் எப்படிபட்டவர்கள் என்றால் இப்படித் தான்சரி, கேரள எதிர்கட்சி யார் என்றால் காங்கிரஸ், அது கம்யூனிஸ்டுகளுக்கு பெரியப்பா வகையறா என்பதால் ரகசிய இழை உண்டு.

இன்று உத்திரபிரதேசம் எனும் பெரும் மாநிலம் யோகி எனும் சன்னியாசியால் எழும்பி நிற்க, விஜயன் எனும் கம்யூனிச முதல்வரால் கொரோனா, ஜிகா, நிபா என மோசமாக கலங்கி நிற்கின்றது கேரளம் அந்த காவி சன்னியாசி சாதாரணம் அல்ல, அவர் செய்திருப்பதும் எளிதான சாதனை அல்ல, உலகமே உற்று நோக்கும் பெரும் சாதனை அதுகேரள கம்யூனிஸ்டுகள் வெட்கத்தை விட்டு, அதை விட முக்கியமாக அந்த கம்யூனிச கொள்கையினை விட்டுவிட்டு அவரிடம் பாடம் படிப்பது நல்லது..

கட்டுரை வலதுசாரி :- சிந்தியனையாளார் ஸ்டாண்லி ராஜன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version