பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு ஆண்டும், இந்திய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையிழும் ஊக்கப்படுத்ததும் விதமாகவும் , நாட்டின் எல்லை பகுதிக்கு சென்று, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.கடந்த 2014-ல் சியாச்சினிலும், 2015-ல் பஞ்சாபிலும், 2016-ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.
2017ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018ம் ஆண்டில் உத்தரகண்டிலும், 2019ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு (2020) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார் பிரதமர் . ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி புகைப்படங்கள் உங்களுக்காக.
அவர் பேசியதாவது ; நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வந்துள்ளேன். ஒவ்வொரு தீபாவளியையும் நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களுடன் கொண்டாடுகிறேன். இன்று, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் இங்குள்ள நமது வீரர்களுக்காக என்னுடன் கொண்டு வந்துள்ளேன். நவ்ஷேரா நமது புனிதமான பகுதி. அனைத்து கடினமான நேரத்திலும் நமது பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக பாடுபட்டு வருகின்றனர்.
எதிராளிகளுக்கு தகுந்த பதிலடியை நமது வீரர்கள் கொடுத்துள்ளனர். துல்லிய தாக்குதலில் நீங்கள் காட்டிய தீரம் மெய்சிலிர்க்க வைத்தது. உங்களின் வீரத்தை எண்ணி பெருமைப்படுகிறேன். நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கும், பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் பாதுகாப்பு வீரர்களான நீங்கள் தான் காரணம்முன்னர், ராணுவ தொழில்நுட்பத்தில் பிற நாடுகளை நம்பியிருந்தோம். தற்போது 200க்கும் மேற்பட்ட ராணுவ ஆயுதங்களை நாம் உற்பத்தி செய்கிறோம். ராணுவ துறையில் இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.