பிரதமர் மோடி தலைமையினாலான மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவித்துள்ளது.

தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67 கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.

இந்தத் தவணையுடன் நடப்பு நிதியாண்டில் தகுதியான மாநிலங்களுக்கு வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியமாக ரூ.69,097 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்  275-வது சட்டப்பிரிவுப்படி வருவாய் பகிர்வுக்குப் பிந்தையப் பற்றாக்குறை மானியம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் கணக்குகளில் பற்றாக்குறையைப் போக்க 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு  வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதற்குத் தகுதியான மாநிலங்களை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட பகிர்வைக் கணக்கில்கொண்டு மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையேயான பற்றாக்குறை அடிப்படையில் இது முடிவு செய்யப்படுகிறது.

2021-22-ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு ரூ.1,18,452 கோடி வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவற்றில் இதுவரை ரூ.69,097  கோடி (58.33%) வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம். நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Exit mobile version