திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற எண் மண் எண் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் களைந்துகொண்டது குறித்து பிரதமர் மோடி கருத்து பதிவுட்டுள்ளார்.அதில் பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில், மக்களும் நமது கட்சி நிர்வாகிகளும் சிறப்பான பாச அடையாளங்களை பகிர்ந்து கொண்டனர், அதை நான் என்றென்றும் நேசிப்பேன். ஈரோடு விவசாயிகள் சார்பில் மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது.
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கும் நமதுஅரசின் முடிவு, விவசாயிகளிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தோடர் பழங்குடி சமூகத்தின் சால்வையும் பெற்றேன். சுயஉதவிக்குழுக்களை வலுப்படுத்துவதற்கான நமது அரசின் முயற்சிகள், இதுபோன்ற உள்ளூர் தயாரிப்புகளை உலக அளவில் பிரபலமாக்கும். ஜல்லிக்கட்டு காளையின் சிலையை பெறும்பொழுதும் மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
காங்கிரசும், திமுகவும் ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லை என்பதை தமிழ்நாடு மறந்துவிடவில்லை. நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழ்நாட்டின் பெருமைமிகு கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு மிகுந்த உற்சாகத்துடன் தொடர்வதை உறுதிசெய்தது. என பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது X சமூகவலைதள பக்கத்தில் கருது பதிவிட்டுள்ளார்.