Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

“Gcon” என்ற உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா அரசு !

Oredesam by Oredesam
November 18, 2024
in செய்திகள்
0
“Gcon” என்ற உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா அரசு !
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Niger’ விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

அங்கு, 60,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டின் பல்வேறு முக்கிய துறைகளில், 200க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக நேற்று நைஜீரியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் அபுஜாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நைஜீரிய மக்களுக்கு பிரதமர் மோடி மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை குறிக்கும் விதமாக, அபுஜா நகர சாவி பிரதமரிடம் வழங்கப்பட்டது.

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி நேற்று அந்நாட்டு அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது.

இதன்மூலம் ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருதாக இந்த ‘The Grand Commander of the Order of the Niger’ விருது உள்ளது.

பிரதமர் மோடி நைஜீரியா,பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நைஜீரியாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து நாளை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார்.

கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“G20” மாநாட்டை முடித்துவிட்டு, புதன்கிழமை கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கயானாவில் இந்தியா-கேரிகோம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கரீபியன் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்படவுள்ளது.கயானாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுடன், இந்தியர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

இருநாட்டு பிரதிநிதிகள் தரப்பிலான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி, அதிபர் டினுபு தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியா – நைஜீரியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நைஜீரிய பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்றார். அங்கு 18, 19ல் நடக்கும், ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.அதன்பின், 19, 21ல் தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்கிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பொதுச்சொத்தை  சேதப்படுத்துபவர்கள்  தேசதுரோகிகள்-இயக்குநர் பேரரசு அதிரடி

பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் தேசதுரோகிகள்-இயக்குநர் பேரரசு அதிரடி

June 23, 2022
ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

September 6, 2024
இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி  மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

June 13, 2020
கால்வாயில் கட்டு கட்டாக கொட்டிக் கிடந்த பணம் : குதித்து அள்ளிய மக்கள்…

கால்வாயில் கட்டு கட்டாக கொட்டிக் கிடந்த பணம் : குதித்து அள்ளிய மக்கள்…

May 8, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x