Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பா.ஜ.க கூட்டணியில் பாமக! ராமதாஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. திமுக கனவில் மண்ணை அள்ளிப்போட்ட சம்பவம்!

Oredesam by Oredesam
June 9, 2025
in செய்திகள், தமிழகம்
0
ராஜ்யசபா தேர்தல்; அதிமுக.,வுக்கு பா.ஜ.க, பாமக ஆதரவு !
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறியது சரியே என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறிய ராமதாஸ், சூசகமாக கூட்டணி பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக, கூட்டணியை உறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனை இன்னும் ஓயவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். வன்னியர் சங்க மாநாட்டிலும் அந்த பிரச்னை எதிரொலித்தது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கடைசியாக கடந்த வாரம் அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அன்புமணியும் ராமதாஸை சந்திக்கச் சென்றிருந்தார்.தொடர்ந்து, சென்னை சென்ற ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை மீண்டும் சந்தித்துப் பேசினார். மேலும், அண்மையில் பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராமதாஸின் பேரன் முகுந்தனும் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அமித்ஷாவின் தமிழக வருகை தொடர்பான கேள்விக்கு, “நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பல பிரதமர்களோடு தொடர்பில் இருந்தவன். இப்போதைய பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனாலும் அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

மேலும், அமித் ஷா மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், “தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்பு இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. எனவே ஜனவரி மாதம் தங்கள் கூட்டணி தொடர்பான நிலையை அறிவிப்போம் என தெரிவித்து விட்டது.

பாமகவை பொறுத்தவரை தற்போது உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் இடையே நடைபெறும் மோதல் காரணமாக கூட்டணி தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை. கடந்த தேர்தலில் தான் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனச் சொன்னதாக ராமதாஸே கூறி இருந்தார். இதற்கிடையே தான் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார். மேலும், கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே பாமக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.பா.ம.கவை உடைத்து திமுக பக்கம் கொண்டுவர போடப்பட்ட பிளான் சுக்குநூறாகி உள்ளது. இதனால் அப்செட்டுடன் உள்ளது அறிவாலயம்!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்! சமூக நீதிக்காக பாடுபடுவதாக நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது!

நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்! சமூக நீதிக்காக பாடுபடுவதாக நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது!

July 13, 2021
vck

தொல்லை தரும் நிர்வாகிகள்! மேடையில் கண்ணீர் விட்டு அழுத வி.சி.க பெண் மாவட்ட செயலாளர்! இதுதான் விசிக சமூகநீதியோ?

August 14, 2023
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!

தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!

November 18, 2021
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

March 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x