ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கைது.

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ மத போதனை என்று கூறிக்கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் பாதிரியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது சிவகாசி பகுதியில் வீடு வீடாக சென்று ஜெபக் கூட்டங்களை நடத்தி வரும் கிறிஸ்துதாஸ் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தவுடன் அவர்கள் அதிர்ச்சியடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் கிறிஸ்தவ பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.வீடு வீடாக சென்று ஜெபம் செய்யும் பாதிரியார் ஒருவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ பாதிரியார் என்ற போர்வையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version