புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே கடந்த மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அரசின் பொதுப்பணித்துறை நமச்சிவாயம்,
காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தனக்கு அளிக்கப்படவில்லை. தனது தொகுதிக்கும், ஆதாரவாளர்களுக்கும் எவ்வித பணிகளையும் செய்ய முடியவில்லை. மேலும் அரசியலில் இருந்து விலகலாமா, மாற்று அரசியல் செய்யலாமா என ஆதரவாளர்களிடம் கேட்க, அவர்கள் ‘வேண்டாம் என்றும் மாற்று அரசியலில் ஈடுபடலாம்’ என கோஷமிட்டனர்.
பின்பு அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணா ராவ், தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில்,தற்பொழுது மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்திருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















