தி.மு.க மூத்த தலைவரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்களின் மருமகள் மெர்சி செந்தில்குமார். திமுகவின் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில் குமார் அவர்களின் மனைவி. மெர்சி செந்தில் குமார் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். திண்டுக்கலில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் மனைவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பல சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மெர்சி செந்தில்குமார் பேசியதாவது: பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். நமக்கு எல்லாம் வீடு, குழந்தைகள் என ஒரு வட்டம் இருக்கிறது. நாம் சமூக சேவை செய்வதற்கு நேரம் கிடைப்பது இல்லை. நாம் வேலை இல்லாத நேரத்தில் தான் சமூக சேவை செய்கிறோம்.
ஆனால் ஒட்டுமொத்த வாழ்க்கையையே சேவைக்காக அர்ப்பணிக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கிறோம்? ஒரு பாதிரியார் (ஸ்டேன் சுவாமி) இறந்துவிட்டார். இன்று 200 பேர் குரல் கொடுப்பார்கள். நாளையும் ஒரு பாதிரியாரும் சிஸ்டரும் எங்கோ ஒரு இடத்தில் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள்.
கல்வியும் பகுத்தறிவும் பாதிரியார்கள் சிஸ்டர்க்ள் வந்த பின்னர்தான் நமக்கு கிடைத்தது. பள்ளி, கல்லூரிகளில் அரசியலும் சட்டமும் சொல்லித்தரப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள், சிஸ்டர்கள் கைகளில் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் துறவறம் பற்றியும் சொல்லி கொடுங்கள்.
துறவிகளாக வாழ்வது மிகப் பெரிய கடினமானது. உலகத்தில் இருக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களை ஹீரோ ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியம். இன்னொரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று தோன்றுகிறது. இனிமே இந்த உலகத்தில் எவனாக இருந்தாலும் ஒரு பாதரையோ சிஸ்டரையோ கைது பண்ண வேண்டுமானால் வாடிகனில் போப் ஆண்டவரிடம் அனுமதி கேட்க வேண்டும். போப் ஆண்டவரிடம் கேட்காமல் கைது செய்யக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். துறவிகளாக இருப்பவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றுகிறவர்கள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்மையில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியின் அமைச்சரின் மருமகளும், எம்எல்ஏவின் மனைவியுமான ஒருவர் இப்படி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.updatenews360.com/trending/dmk-minister-epeech-about-christian-pastors-arrest-280721/
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















