சாய்னா நேவால் மீது ஆபாச விமர்சனம்..பாய்ஸ் படத்தில் நிர்வாணமாக ஓடிய ஆபாச சித்தார்த்..மகளிர் ஆணையம் வழக்கு பதிவு!

படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள . சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆர்வத்துடன் கருத்துக்களை பகிர்வது ஆபாச சித்தார்த்தின் வழக்கம். அதிலும் குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராகவும் , பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிராகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியவகையில் கருத்து பதிவிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் தான் இந்த பாய்ஸ் பட ஆபாச சித்தார்த்.

இந்த நிலையில் அண்மையில் பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கருத்து பதிவிட்டார் இந்த பதிவில் பிரதமருக்கு ஆதரவாகவும் பதிவிட்டார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். அவர் பதிவில் : நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் ? என்று கேள்வி எழுப்பியதோடு பாரத் ஸ்டேண்ட் வித் மோடி, என்ற ஹேஷ்டாக்கையும் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 5 ந்தேதி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவிடப்பட்ட சாய்னா நேவாலின கருத்துக்கு 5 நாட்கள் கழித்து எதிர் வினையாற்றும் நோக்கில் வழக்கம் போல டுவிட்டரில் கருத்து பதிவிட்டார் நடிகர் சித்தார்த். “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்… ஆண்டவருக்கு நன்றி… எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.. வெட்கப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்..மிகவும் ஆபாசமாக முறையில் அவதூறாக விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமூக சீர்த்திருத்த, கருத்தாழம் மிக்க பாய்ஸ் படத்தில் நடித்ததால் தமிழ் திரை உலகில் புகுந்தவர் நடிகர் சித்தார்த்.அந்த வகையில் சித்தார்த்தின் இந்த அறுவெறுபான டுவிட்டர் விவகாரத்தை தன்னிச்சையாக விசாரணைக்கு கையில் எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவி நேகா சர்மா, டுவிட்டரின் தலைமையகம் மும்பையில் இருப்பதால் , உடனடியாக இது குறித்து சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மகராஷ்டிரா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற்று பெருமைசேர்த்த வீராங்கனை சாய்னா நேவாலை இழிவாக சித்தரித்த சித்தார்த்தை கண்டித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் வலுக்க தொடங்கி இருக்கின்றது. மன்னிப்பு கேட்க சொல்லி பலரும் சித்தார்த்துக்கு அறிவுறுத்திய நிலையில், தான் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், என்று டுவிட்டர் மூலம் மீண்டும் புத்தி சொல்லியுள்ளார் சித்தார்த்.

சிவசேனா எம்.பி பிரியங்கா சதூர்வேதி , இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயியும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோடி சென்னை காவல்துறையில் பாஜக பிரமுகர் திருப்பதி நாராயணன் புகார் அளித்துள்ளார்.

வழக்கமாக தனது விரலால், மத்திய அரசுக்கு எதிராக ஒரு டுவிட்டை போட்டு விட்டு டுவிட்டரில் டிரெண்டாக்கும் வித்தை தெரிந்த சித்தார்த், இந்த முறை ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் விதமாக டுவிட்டியதால் வில்லங்கம் வீடு தேடி வந்துள்ளது குறிப்பிடதக்கது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version