பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடி மற்றும் ஜெய்ஷங்கர் அவர்களின் ராஜ தந்திரம் தாறுமாறான வெற்றி பெற்றுள்ளது.
தற்போது உலகை ஆள்வது மேற்குலக நாடுகளா இல்லை,கிழக்குலக நாடுகளாக என இரண்டு அணியாக போட்டி போட்டு வருகிறது.வல்லரசு நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் பங்கேற்பதில்லை என இந்தியா தற்போது வரை நடுநிலை வகித்து வருகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்களை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.2014ம் ஆண்டு தனது முதல் பதவியேற்பு விழாவுக்குத் தெற்காசிய நாட்டுத் தலைவர்களை அழைத்து இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் புத்துணர்வு ஊட்டினார் பிரதமர் மோடி.
மோடி 1.0 மற்றும் மோடி 2.0 ஆகியவை சவூதி அரேபியாவிலிருந்து இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் வரையிலும், கத்தார் முதல் எகிப்து வரை உள்ள நாடுகளுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தியது.மோடி 3.0 காலத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்யா அதிபர் புதினும் பிரதமர் மோடிக்குத் தருகிற மரியாதை, உலகையே ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த நிலையில் உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்வது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இரு நாடுகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து வரும் நிலையில் போதாக்குறைக்கு ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் தங்களது வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை போருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தது.
ரஷியா- உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தினார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கும் மோடி சென்று வந்தார். இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்
எனவே தற்போது பேசியுள்ள ஜெலன்ஸ்கி, ” உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக மாறி உள்ளார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















