பாதிரியார் கைது! அண்ணாமலை அடித்த மெகா சிக்ஸர்! தலைவராக பொறுப்பேற்று முதல் வெற்றி!

குமரி மாவட்டத்தில் , அருமனை அருகே பனங்கரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அருமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கண்டன கூட்டத்தில் அருமனை கிறிஸ்தவ இயக்கத் தலைவா் சி.ஸ்டீபன், பாதிரியார் ஜாா்ஜ் பொன்னையா ஆகியோா் தலைமை வகித்தனா். காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கே.ஜி. ரமேஷ்குமாா், மதச்சாா்பற்ற ஜனதாதள நிா்வாகி ஜாண் கிறிஸ்டோபா், எஸ்.டி.பி.ஐ நிா்வாகி சுல்பிகா்அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா்சையது அலி, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிா்வாகி நூா்தீன், முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகி காதா் மைதீன், அருமனை பாக்கியபுரம் தேவாலய இணை பங்குத்தந்தை அமல்ராஜ், சிபிஐஎம்எல் கட்சியின் மாவட்டத் தலைவா் அந்தோணிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், திமுக வெற்றி பெற்றது திறைமையினால் அல்ல கிருஸ்துவர்கள் இஸலாமியர்கள் போட்ட பிச்சை என்றும் ஹிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன், முடிந்தால் எங்களை தொட்டு பார், எங்களை ஒரு மயிரும் புடுங்க முடியாது, பூமா தேவி அழுக்கானவள்,பிரதமர் மோடி, அமித் ஷா புழு புழுத்து தான் இறப்பார்கள் மேலும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது தமிழகமெங்கும் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார்கள் குவிந்தன.

பாதிரியார் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பாதிரியார் ஜார்ஜ் உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.இதனால் விஷயம் பெரிய அளவில் வெடித்தது. இதனை எதிர்பாராத தமிழக அரசு அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் கைது செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காவல் துறை தேடுதல் வேட்டையில் இறங்கியது.

காவல்துறை தொடர் தேடுதல் வேட்டையில் மதுரை அருகே கள்ளிக்குடியில் வைத்து பாதிரியார் ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார். 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்த காவல் துறை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய கோரி பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் அண்ணமலை அவர்கள் பொறுப்பேற்று முதல் ஆர்ப்பாட்டம் வெற்றியாக அமைந்துள்ளது. இதனை பா.ஜ.கவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Exit mobile version