தமிழக பாஜக தலைவர் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் இந்த யாத்திரை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அண்ணாமலையை நோக்கி நகர்கிறார்கள். இதனால் திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது.
இதன் நிறைவு விழாவானது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த மாதப்பூர் பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் பாஜக சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் 5 லட்சம் பேரை திரட்ட தமிழக பாஜக மும்முரமாகக பணிகளை மேற்கொன்டுள்ளது. மேலும் அடுத்த நாளும் திருநெல்வேலியில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது அதிலும் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டம் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஏற்படுகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது முதல் மீண்டும் செல்வது வரையிலான பயண திட்டம் விவரம் வெளியாகியுள்ளது. 27ஆம் தேதி – மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர்.
2.45 முதல், 3.45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர்.
3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்..5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்.
6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்.அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.
28.02.2024 ஆம் தேதி பயண விவரம்
காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.
8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார்.
9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் பாஜகவின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவிட்டார் என்றே கூறலாம் தமிழகத்தில் இரு மாபெரும் பொதுக்கூட்டம் வாயிலாக பாஜகவின் பலத்தை காட்ட முடிவெடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடத்துவது நயினார் நாகேந்திரன்,இவர் தற்போது ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் மேலும் திருநெல்வேலி பாராளுமன்ற பாஜகவின் வேட்பாளர் அதன் காரணமாகவே திருநெல்வேலியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீட் கன்ஃபார்ம் ஆகியுள்ளது இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வெற்றி பெற்ற பிறகு ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது