மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது இந்த சர்வேயிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தார் பிரதமர் மோடி, சர்வே எடுக்கும் முன் இனி முதலிடத்தை மோடியின் பெயரில் எழுதிவிட்டு தான் சர்வேவை நடத்த வேண்டும்! போலிருக்கும் போல. ஒவ்வொரு முறையும் கடந்த முறை பபெற்ற சதவீதத்தை விட அதிகமாக பெற்று வருகிறார் மோடி. இவருக்கும் அடுத்த தலைவருக்கும் இருக்கும் இடைவெளி என்பது தொடமுடியாத அளவிற்கு உள்ளது.
பிப்ரவரி மாதம் தொடக்கம் வரை எடுக்கப்பட்ட சர்வே முடிவில் அப்ரூவல் ரேட்டிங் என்று சொல்லப்படும் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதில், 77% வாக்குகளோடு தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. இரண்டாவது இடம் பிடித்த மெக்ஸிகோ அதிபர் 65% பெற்று எங்கேயோ பின்தங்கி நிற்கிறார் ஜோ பைடன் பற்றி எல்லாம் கேட்கவே தேவையில்லை. 37% பெற்று தத்தளித்துக்
கொண்டிருக்கிறார். இந்த வாக்கெடுப்பில் 70% மேல் பெற்ற ஒரே உலகத் தலைவர் மோடி அவர்கள் தான்
பிரதமர் மோடியின் செயல்பாடு உலக மக்களை முழு மனதோடு திருப்திப்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று கிடையாது . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறை இந்த சர்வே முடிவு வெளியாகும் போதும், மோடி மீதான மக்களின் நம்பிக்கை சற்று கூடிக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்ததில்லை.
இன்றைய தேதியில் உலக அளவில் ஒப்பாரும் உட்காரும் இல்லாத ஒரே தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் திகழ்கிறார்.ஏற்கனவே பல கருத்துக் கணிப்புகள், பாஜக வரலாறு காணாத மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் வரை மோடியின் செயல்பாட்டில் திருப்பி அளித்துள்ளதாக வாக்களித்துள்ளது ஒத்துப் போகிறது.
சர்வே முடிவுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 78 சதவீதம் பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 65 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீத வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 52 சதவீத வாக்குகள் பெற்ற 4-ம் இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 51 சதவீத வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளார்.
பிரேசில் அதிபர் டி சில்வா 46 சதவீத வாக்குகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார். ஆஸி.பிரதமர் அந்தோணி அல்பனேசி 45 சதவீத வாக்குகள் பெற்று 7-ம் இடத்தில் உள்ளார். இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 41 சதவீத வாக்குகள் பெற்று 8-ம் இடத்தில் உள்ளார். ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 39% வாக்குகள் பெற்று 9-ம் இடத்தில் உள்ளார். பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு 38% வாக்குகளுடன் 10-ம் இடத்தில் உள்ளார்.