மருத்துவக் கல்வியில் புரட்சி செய்த பிரதமர் மோடி! பிரதமர் மோடியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவப்படிப்பு இடங்களும் வரலாறு காணாத வகையில் பிரதமர் மோடி அவர்களால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பின் அவரின் அரசியல் அனுபவமும் உள்ளது, அது சுவாரஸ்யமானதும் கூட. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக 12.5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

அதில் 10 ஆண்டுகள் சோனியா காந்தி அம்மையாரின் காங்கிரஸ் சர்க்காரின்(2004 – 2014) போது. அப்போது குஜராத்தில் மருத்துவ கட்டமைப்பை முன்னேற்ற முதல்வர் மோடி செய்த அனைத்து முயற்சிகளுக்கும் தனது ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போட்டார் சோனியா காந்தி. ஒரு அரசாங்க மருத்துவ கல்லூரிக்கு கூட அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு முதல்வர் மோடிக்கு அனுமதி வழங்கவில்லை.

வேறு வழியேயின்றி முதல்வர் மோடி தனியார் பங்களிப்புடன் குஜராத்தில் மருத்துவ கல்லூரிகளை திறக்க வேண்டியதாயிற்று.2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆளும் மாநிலமோ, பா.ஜ.க ஆளும் மாநிலமோ அல்லது பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலமோ எந்த பாகுபாடும் இன்றி மருத்துவ கல்லூரிகளை துவக்க அனுமதி வழங்கினார். குறிப்பாக தமிழகத்திற்கு மட்டும் 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி இரண்டாம் முறை பதவி ஏற்றதில் இருந்து 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, மத்திய அரசின் பங்களிப்பாக தலா ஒரு மருத்துவ கல்லூரிக்கு ₹195 கோடி என மொத்தம் ₹2,145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமராக ஆட்சி செய்வதால் பாகுபாடு இன்றி இத்தனை மருத்துவ கல்லூரிகளை நிறுவவும், மருத்துவ கல்லூரி இடங்களை அதிகரிக்கவும் முடிந்திருக்கிறது பிரதமர் மோடி அவர்களால். பிரதமர் மோடியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

SG சூர்யா, பாஜக செய்தி தொடர்பாளர்.

Exit mobile version