கொரோனாவைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் 2021 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு அதாவது 2021 ஜூலை முதல் நவம்பர் வரை, இந்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-IV-ன் (2021 ஜூலை-நவம்பர்) கீழ் 8 மாநிலங்கள் உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளும் பணியை தொடங்கியுள்ளன. சதமிழகம் த்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், கேரளா, ஒடிசா, தெலங்கானா, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் 2021 ஜூன் 28 வரை 1.06 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை எடுத்து சென்றுள்ளன.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-III-ன் (2021 மே-ஜூன்) கீழ், அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 77.42 லட்சம் மெட்ரிக் டன்கள் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் விநியோகித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















