2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மிக முக்கிய துறையான நிதித்துறை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பின் நாளில் அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட்டது ஊறரிந்த ஒன்று. முதல்வர் ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ லீக் ஆனது தான் அவரது துறை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் திமுக PHD முடித்திருப்பது ஊர் அறிந்த ஒன்று என்றாலும் அக்கட்சியை சேர்ந்த அமைச்சரே ஆடியோ வடிவில் அதை வாக்குமூலமாக அளித்தது எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ஆனால் தடாலடியாக பி.டி.ஆர்-ஐ நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் அவரின் ஆடியோ வாக்குமூலத்தை திமுக மேலிடமே ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார் பி.டி.ஆர்.
சட்டசபையில் பி.டி.ஆர் பொங்கியதற்கு காரணம் வெளியாகி உள்ளது. பி.டி.ஆர்அமைச்சராக இருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் எல்காட் ஐடி பூங்காவைத் தவிர, இதர தொழில்நுட்பப் பூங்காக்களெல்லாமே தொழில்துறையின்கீழ் சென்றுவிடுகின்றன. அதேபோல, பல்வேறு துறைகளில் விடப்படும் தொழில்நுட்பம் சார்ந்த டெண்டர்களை ‘எல்காட்’ வாயிலாகச் செய்வதில்லை. இந்த விஷயத்தை நிதி அமைச்சகத்திடமும், முதல்வர் தரப்பிலும் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பி.டி.ஆர்.
ஆனால், எதுவும் மாறவில்லை. இந்த நிலையில்தான், தொழில்நுட்பப் பூங்கா தொடர்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசீலன் எழுப்பிய கேள்விக்கு, “நிதியும் அதிகாரமும் இருப்பவரிடம் கேளுங்கள். என் துறையில் இல்லை” என்று பொங்கியிருக்கிறார் பி.டி.ஆர். இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து பலமுறை இதை மறைமுகமாகச் சொல்லிவிட்டார் பி.டி.ஆர். ‘மனமாச்சர்யங்களை மன்றத்தில்தான் வெளிப்படுத்த வேண்டுமா..?’ என சீனியர்கள் சிலர் சொல்லிப் பார்த்தும், பி.டி.ஆரின் ஆதங்கம் அடங்கவில்லை…’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.மேலும் கோபாலராபுர குடும்பத்துக்கும்
அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் கடந்த ஆண்டு, ஜூலை மாதம் ‘வானம் ஸ்பேஸ்’ (Vaanam Space Tech Accelerator) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார் அல்லவா… அந்த நிறுவனத்தில் அவருடைய சகோதரர் ஹரிஹரனும், சினிமா தயாரிப்பாளர் சமீர் பரத் ராமும் இயக்குநர்களாகவும், மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆலோசகராகவும் இருக்கிறார்கள்.
விண்வெளி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களை ஒன்றிணைத்து அதில் முதலீடு செய்யவும், வெளியிலிருந்து முதலீடுகளைப் பெறவும்தான் சபரீசன் `வானம்’ நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், வெளி முதலீடுகளைப் பெறுவதற்கு அரசின் கொள்கை முடிவு அவசியம். இந்த நிலையில்தான், ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. ‘அதற்காகத்தான் அவசர அவசரமாகத் தமிழக அமைச்சரவையைக் கூட்டியிருக்கிறது’
விண்வெளிக் கொள்கை மாநிலத்துக்குப் பொதுவான ஒன்றுதான். ஆனால், மருமகன் சபரீசன், ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய எட்டு மாதங்களிலேயே, அதுவும் இதுபோல முதலீட்டு நிறுவனம் பெரிதாக எதுவும் இல்லாத ஒரு மாநிலத்துக்குப் புதுக் கொள்கையை அரசு அவசரமாக வடிவமைத்திருப்பதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசின் இந்தக் கொள்கையின் மூலமாக 300 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக் மூலம் 50 சதவிகிதச் சலுகையும், `ஊதிய மானியம்’ என்ற பெயரில் 30 சதவிகிதம் வரை மானியமும் முதலீட்டு நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் விண்வெளித் துறையில் அதிக முதலீடு பெற வாய்ப்பிருக்கிறது. ‘வானம்’ நிறுவனத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு முதலீடு வந்தால், அதில் பெரும் பங்கு அவர்களுக்கு வசப்படலாம். எனவேதான், ‘இது கோபாலபுரக் குடும்பத்தின் தொழில் கொள்கை’ என அண்ணாமலையும், டி.டி.வி.தினகரனும் கடுமையாகச் சாடியிருக்கிறார்கள்”இது குறித்து தான் பி.டி.ஆர் கருத்துக்களை கூறியுள்ளார் இது முழுவதுமாக திமுகவுக்கு எதிராக அமையும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் இந்த விண்வெளி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துளார்.