நாங்கு நேரி அருகே உள்ள வள்ளியூர் அங்குள்ள சிறுமளஞ்சி கிராமம்.இந்த கிராமம் இந்துக்கள் நிறைந்த கிராமம் ஆகும் இந்த கிராமத்தில் பெருமாள் கோவில், சிவன் கோவில், மூங்கிலடி சுவாமி, சாஸ்தா கோயில்கள் உள்ளன.
மேலும் தமிழக அளவில் பிரபலமான ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவிலும் இங்கு உள்ளது.
இங்கு நடைபெறும் கோவில் விழாக்கள் பிரசித்தி பெற்றது இந்த கோயில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்த கிராமத்தில் திடீரென கோவில்கள் அதிகம் உள்ள பகுதியில் காலியான இடத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர் .
ஆனால் அந்த இடம் அவ்வளவு விலை போகாது. எதற்காக இந்த இடம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதை விசாரித்த போது தான் ஊர் மக்களுக்கு விஷயம் தெரிய வந்துளளது.
அந்த இடத்தில மிக பெரிய தேவாலயம் கட்டுவதற்காக அந்த இடம் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என் தெரிய வந்துள்ளது.
இதைத் அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வெளியூர் கிறிஸ்தவ மத மாற்ற கும்பல் தான், இந்த கிராமத்தில் மதமாற்றம் செய்வதற்காக தான் இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகளோ அல்லது வழிபாட்டுக் கூடமோ கட்ட மாட்டோம் என அந்த இடத்தை வாங்கியவர்கள் எழுதி கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் அக் கிராமத்தை சேர்ந்த மக்கள்.
இடத்தை வாங்கியவரும் அதே போல் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது.
இந்த நிலையில் 21-ஆம் தேதி காலை திடீரென வெளியூர்களில் இருந்து வந்த கிறிஸ்தவ மத வெறி கும்பல்கள், அந்த இடத்தில் திடீர் தேவாலயம் கட்டுவதற்கு வேலையைத் தொடங்கினார்கள்.
இதுபற்றி சிறுமளஞ்சி ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்ததும், அவர்கள் கொதிப்படைந்தனர். ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அங்கு திரண்டனர். பெண்களும் வந்திருந்தனர்.
பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், ஊர் தலைவர் ஏ.சி.தங்க கிருஷ்ணவேல், துணை தலைவர் எஸ்.டி.பன்னீர்செல்வன் மற்றும் மகேஷ்குமார், கண்ணன், இசிக்கி உள்பட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது.
அவர்கள் சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களே இல்லாத கிராமங்களில் இடத்தை வாங்கி புதிதாக சர்ச்சுகளை கட்டுவதை கிறிஸ்தவ மதவெறி கும்பல்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இது மக்களிடையே மத மோதல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.