Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; அதிகாரிகள் மாற்றப்படும் அவலம்; என்ன நடக்கிறது சபாநாயகர் ஊரில்?

Oredesam by Oredesam
December 9, 2021
in செய்திகள், தமிழகம்
0
கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; அதிகாரிகள் மாற்றப்படும் அவலம்; என்ன நடக்கிறது சபாநாயகர் ஊரில்?
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில குவாரிகளில் விதிமுறைகளை மீறி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அவை பக்கத்து மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கேரளாவில் மலைகளை வெட்டி கனிமவளங்களை எடுக்கத் தடை இருப்பதால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளின் சுற்றுவட்டாரங்களில் செயல்படும் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கைவிடப்பட்ட குவாரிகளில் இருந்து அனுமதியின்றி முறைகேடாக கனிமங்களை எடுத்து விற்பதாகவும், அதற்காக அவர்கள் அதிக அளவிலான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பல கிராமங்களில் வீடுகளில் வெடிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உள்ளூர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில், குவாரியில் வெடிவைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கல், அருகில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தின் வீட்டில் விழுந்தது. அதனால் கூரை உடைந்து பச்சிளம் குழந்தை பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிடத் தொடங்கினார்கள்.

கனிமவளக் குவாரிகளில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து அப்போது சேரன்மகாதேவி சப-கலெக்டராக இருந்த சிவ கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சில குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் பினாமி பெயரில் நடத்திவரும் குவாரியில் 4,82,640 கன மீட்டர் அளவுக்கு கனிமங்கள் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விட அதிகமாக 8,86,464 கனமீட்டர் அளவுக்கு கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்த மூன்று குவாரிகளுக்கு சப்-கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி 25.72 கோடி அபராதம் விதித்தார். அவரது இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அதிருப்தியடைந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் உடனடியாக அவரை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்தார்கள்.

லாரிகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கனிம வளம் கொண்டுசெல்ல அரசு அனுமதி பெற்ற நடைச்சீட்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை வாங்கும் நடைச்சீட்டின் எண்ணிலேயே பல சீட்டுகளை போலியாக அச்சிட்டு கனிமங்கள் கடத்தப்படுவதை மாவட்ட எஸ்.பியாக இருந்த மணிவண்ணன் கண்டுபிடித்து அத்தகைய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தார்.

குவாரி விவகாரத்தில் அதிரடி காட்டிய சப்-கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே மாற்றப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணனும் தற்போது சென்னையில் காவல்துறை பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தப்பணியிட மாறுதல்களுக்கு, கனிம வளம் கடத்தும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன், நேர்மையாகச் செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியரான விஷ்ணுவையும் மாற்ற தி.மு.க., பிரமுகர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள். பணியிட மாறுதல் என்பது நிர்வாக வசதிக்காகச் செய்யப்படுகிறது. அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்று முடித்துக் கொண்டார்கள்.

இந்த ராதாபுரம் என்பது தற்பொழுதைய தமிழக சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியாகவும்.

தகவல்:- விகடன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தலையில் முக்காடு அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! ஆசிய செஸ் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை!

தலையில் முக்காடு அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! ஆசிய செஸ் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீராங்கனை!

June 20, 2021
நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.

September 14, 2021

சங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்களா.

May 14, 2020
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!… தி.மு.கவின் போங்கு நாடகம் அம்பலம்… மாட்டிக்கிட்டியே பங்கு…

அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!… தி.மு.கவின் போங்கு நாடகம் அம்பலம்… மாட்டிக்கிட்டியே பங்கு…

October 10, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x