இந்திய விமானப் படைக்கான ரஃபேல் விமானங்களின் முதலாவது தொகுப்பு ஜூலை 2020 இறுதிவாக்கில் வந்து சேரும் என்று தெரிகிறது. வானிலை நிலவரத்தைப் பொருத்து, ஜூலை 29 ஆம் தேதி அம்பாலா விமானப் படை நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த விமானங்களை விமானப் படையில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். விமானங்கள் வந்து சேருவது குறித்து செய்தி சேகரிக்க, செய்தியாளர் நிகழ்ச்சி எதுவும் இருக்காது. இறுதித் தொகுப்பு விமானங்கள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் வந்து சேரும்.
அப்போது முழு அளவில் செய்தியாளர் செய்தி சேகரிப்புகளுக்கு அனுமதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த விமானங்களைக் கையாள்வதற்கான இந்திய விமானப் படை விமானக் குழுவினர், தரைக் கட்டுப்பாட்டு மைய அலுவலர்கள் ஆகியோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளும் இதில் அடங்கும். விமானங்கள் வந்து சேர்ந்த பிறகு, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது பற்றி கூடிய விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















