கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவர். அவர் தொகுதிக்குட்பட்ட கம்பமாலா என்ற பகுதியில் திடீரென ஏழு மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தி கொண்டு , போராட்டத்தை துவக்கினார்கள் .
அந்த ஏழு பேரிடமும் துப்பாக்கி இருந்தது, இந்த பயங்கரவாதிகள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்கிறோம் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டினார்கள். போராடியவர்களில் 7 பயங்கரவாதிகளில் 3 பேர் பெண்கள்.
மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், துப்பாக்கியுடன் வந்து பொதுமக்கள் முன்னிலையில் பஜாரில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியது, அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் அடைய செய்தது மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளும் கம்யூனிஸ்டுகள் என்பதனால் பிணராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.