பத்திரிகைக்கு அலுவலங்களில் வாத்தி ரெய்டு! அதிரடியில் வருமான வரித்துறை! அடுத்த டார்கெட் தமிழகம்!

இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான மத்திய பிரதேசத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தைனிக் பாஸ்கர் நாளிதழ் 12 மாநிலங்களில் 65 பதிப்புகள், 211 துணை பதிப்புகளை உடைய மிக பெரிய பத்திரிக்கை ஆகும்இதுமட்டுமல்லாமல். இது நாடு முழுவதும் ஹிந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் நாளிதழ்களை வெளியிடுகிறது.இவை தவிர ஏழு மாநிலங்களில் 30 வானொலி நிலையங்கள், ஆறு செய்தி இணையதளங்கள், நான்கு ‘மொபைல் போன்’ செயலிகளும் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் உள்ள டில்லி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள ‘தைனிக் பாஸ்கர்’ நாளிதழ் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய பிரேதேசம் தலைநகர் போபாலில் உள்ள நாளிதழ் உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை திடீரென நடத்தப்பட்டது.

இதே போல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியான ‘பாரத் சமாச்சார் டிவி’ அலுவலகம், தலைமை ஆசிரியர் பிரஜேஷ் மிஷ்ரா, நிர்வாகி வீரேந்திர சிங் மற்றும் சில ஊழியர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் எடுப்பாட்டர்கள். மேலும், உத்திர பிரதேச சேர்ந்த பா.ஜ.க – எம்.எல்.ஏ. அஜய் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

போலியான செய்திகளை வெளியிட்டு இந்திய இறையாண்மையினை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடும் பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் கட்ட தொடங்கியுள்ளது. புதிய தகவல் தொழிநுட்ப சட்டம் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையில் வெளியிடும் தவறான செய்திகளுக்கு அந்த அந்த நிறுவனங்களே பொறுப்பு என சட்ட திருந்திங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை என்பது நாடு முழுவதும் உள்ள இந்தியாவிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அடுத்து தமிழகத்தில் தான் ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்தியாவிற்கு எதிராக கிளப்பப்படும் பொய் செய்திகளில் தமிழகமும் ஒன்று என சொல்லப்படும் நிலையில் பத்திரிகை அலுவங்களில் நடைபெற்ற ரெய்டு தமிழகத்தில் பீதி அடைய செய்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் கூறுகையில் : மத்திய விசாரணை அமைப்புகளின் பணிகளில் நாங்கள் தலையிடுவது இல்லை. அவர்களது வேலையை யாருடைய தலையீடும் இன்றி செய்கின்றனர். எந்தவொரு சம்பவம் குறித்தும் செய்தி வெளியிடுவதற்கு முன், உண்மையை உறுதி செய்ய வேண்டும். என்று கூறியுள்ளார்.

Exit mobile version