பிஜேபியின் தமிழக ராஜ்யசபா எம்பிக்கு
வாழ்த்துகள்.

ஒற்றை எம்எல்ஏ கிடையாது. வாக்குகளும் ஒற்றை சதவீதம் கூட கிடையாது. இருந்தாலு ம் வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்து இருக்கிறது என்றால் அதற்கு பிஜேபி தான் முழு காரணம்.

தமிழகத்தில் பிஜேபி தன்னுடைய கோட்டாவாக ஒரு எம்பி சீட்டை எதிர்பார்த்தது. ஆனால் அதிமுக தரப்போ பிஜேபிக்கு என்றால் கட்சியில் வெட்டு குத்து தான் விழும் என்று ஒப்பாரி வைக்க யோசித்த பிஜேபி கடைசியாக வாசனை முன் நிறுத்தியது.

இதற்கு முதல் காரணம் நீண்ட நாட்களாக வாசனை பிஜேபியில் இணைக்கும் வகையில்
பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஆனால் இதுவரை பிடி கொடுக்காது இருந்து வந்த வாசனுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் கட்சியை இணையுங்கள் என்கிற பிஜேபியின் டீலிங் பிடித்து விட ஓகே கூறி விட்டார்.

இப்பொழுது எம்பி பதவியை பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் வாசன் தன்னுடை ய கட்சியை கலைத்து விட்டு பிஜேபியில் ஐக்கியமாக இருக்கிறார்.

அதனால்தானாகவே பிஜேபி எதிர்பார்த்த தமிழக எம்பி கோட்டாவும் வாசன் மூலமாக கிடைத்துவிடும்

இன்னொன்று வாசனுக்கு ராஜ்ய சபை சீட்டை அளித்து திமுக காங்கிரஸ் கூட்டணியில் குட்டையைகிளப்ப ஆரம்பித்து உள்ளது எதிர் முகாமில் ஒற்றை எம்எல்ஏ கூட இல்லாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எம்பி பதவியை அதிமுக அளித்து இருக்கிறது.

ஆனால் 7 எம்எல்ஏக்களை வைத்து இருந்தும் திமுக வெற்றிக்குதங்களின் எம்எல்ஏ க்களின் ஆதரவு கட்டாயமாக தேவைப்படும் பொழுதும் தங்களைபுறக்கணித்த திமுகவுக்கு காங்கிர ஸ் பாடம்புகட்ட இந்த வாசன் ராஜ்யசபா எம்பி விசயத்தை காங்கிரஸ் நிச்சயமாக பயன்படு த்திகொள்ளும்.

ஆக ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் பிஜேபி வாசனை முன் வைத்து ஒற்றை கல்லில்
இரண்டு மாங்காயை அடித்து இருக்கிறது என்றே கூறலாம்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version