அசோக் கெலாட் ஆட்சி கவிழ்வது உறுதி-ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து 100 சதவீதம் உறுதியாகி விட்டது. ஒருபக்கம் சச்சின் பைலட் மூலமாக 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களை வைத்து அசோக்கெலாட் டின் ஆட்சியை கவிழ்க்க முனைந்து வரும் பிஜேபி இன்னொரு பக்கமாக காங்கிரஸில் இணைந்த பகுஜன் சமாஜ்கட்சியின் 6 எம்எல்ஏக்களின் பதவிக்கு வேட்டு வைத்து வருகிறது.சோனியா அசோக் கெலாட் என்கிற அர சியலில் பழம் தின்னு கொட்டை போட்டராஜதந்திரியின் பேச்சைக் கேட்டு ராஜ ஸ்தான் ஆட்சியை காப்பாற்றி விடலாம்என்று கனவில் இருக்கிறார்.
ஆனால் மோடி அமித்ஷா போன்றவர்கள் அரசியலில் பழம் தின்று கொட்டை மட்டுமல்ல அந்த கொட்டையை மறுபடியும் விதைத்து மரமாக்கி வளர்த்து வரும் வி த்தகர்கள் என்பதை காங்கிரஸ் சோனி யா கூட்டம் இன்னமும் உணராமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.அசோக் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கவர்னரிடம் காண்பித்து இருக்கிறார். நடுநிலை வகிப்போம் என்று கூறிய பாரதியட்ரைபல் பார்ட்டியின் 2 எம்.எல்.ஏ க்களின் ஆதரவை பெற்று விட்டதால் இனி ஆட்சிகவிழாது என்று கனவில் இருக்கிறார்.கடந்த ஆண்டு 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கசெய்தார் அசோக் கெலாட்.
அப்பொழுதுஅனைவரும் அசோக் கெலாட்டின் ராஜதந்திரம் பற்றி ஆஹோ ஓஹோ என்றுஅள்ளி விட்டார்கள்.ஆனால் இப்பொழுது அதில் உள்ள பிரச்ச னையை பிடித்துக் கொண்டு பிஜேபி கோ ர்ட்டுக்கு செல்கிறது. கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் படி ஒரு கட்சியின் எம்எல்ஏஅல்லது எம்பிக்களில் 3 ல் 2 பகுதி உறு ப்பினர்கள் வேறு கட்சிக்கு சென்றால் அவர்களின் பதவி பறிக்கப்படாது.
இந்த விதியை வைத்து தான் அசோக்கெலாட் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ க்களையும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்து விட்டார்.ஆனால் அவர்கள்காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிதனி அணியாக செயல்பட இருக்கிறோம்என்று சபாநாயகர் க்கு நோட்டீஸ் அளி த்து இருக்க வேண்டும்.பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனிஅணியாக செயல்பட்டு அதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்து அதைப்பற்றி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமைக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.
ஆனால் இதில்எதையும் ராஜஸ்தான் சபாநாயகர் செய்யவில்லை. அதனால் அவர்கள் காங்கிரஸ்கட்சியின் உறுப்பினர்களாக வர முடியாது.எனவே இப்பொழுதும் அவர்கள் பகுஜன்சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள்.அதே நேரத்தில்கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் 6 பகுஜன் சமாஜ் கட்சிஎம்எல்ஏக்களும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையின் உத்த்ரவுக்கு கட்டுப்படாமல் காங்கிரஸ் வேட்பாளர்க்கு ஒட்டு போட்டு இருக்கிறார்கள்.ஆதலால் அவர்களின் எம்எல்ஏ பதவியைகட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் படி பறிக்க வேண்டும் என்று பிஜேபி கோர்ட்டுக்குசென்று இருக்கிறது. ஆக அசோக் கெலாட் ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விடு ம் நோக்கில் செயல் பட்டு வரும் பிஜேபியின் நோக்கம் நிறைவேறி விடும் என்றே தெரிகிறது.