காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும்தலித் படுகொலையை நான் கண்டுக்க மாட்டேன்!ஏனெனில் நான் ஒரு போலி முற்போக்கு !
ராஜஸ்தானில் தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார். இப்படுகொலை அக்டோபர் 9 இரவில் ஹனுமான்கட் மாவட்டத்தில்உள்ள பிரேம்புரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. அடித்தவர்கள் தாங்கள் ஒரு தலித்தை அடித்துக் கொல்வதை வீடியோ எடுத்துள்ளனர். அதை முகநூல், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்பெருமையாக வெளியிட்டுள்ளனர்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார்.தலித் படுகொலை என்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயம்.இந்த அநீதியை திருமாவளவன் கண்டிப்பாரா?ஜெயராஜ் என்ற வன்னி அரசு கண்டிப்பாரா?விடுதலைச் சிறுத்தைகளில் யாராவது கண்டிப்பார்களா?ம் ஹூம்! ஒருவரும் கண்டிக்க மாட்டார்கள்.கண்டித்தால் காசு கிடைக்குமா? காசு கிடைத்தால் எத்தியோப்பியாவில் ஒரு 98 வயதுக் கிழவன் இறந்து போனதற்கு எத்தியோப்பிய அரசைக் கண்டிப்பார்கள்.ராஜஸ்தானில் என்ன விஷேசம் தெரியுமா?
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, அசோக் கெலாட் முதல்வரான பிறகு, 2018 டிசம்பர் முதல்,ராஜஸ்தானில் தலித் படுகொலை நடந்து கொண்டே இருக்கிறது.அடிக்கடி தலித் படுகொலை பற்றிய செய்தியைக் கேட்டால்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சோறு தொண்டையில் இறங்குமாம்.இதே ஹனுமான்கார் மாவட்டத்தில் உள்ள கிக்ராலியா என்ற கிராமத்தில் கடந்த ஜூன் 5 அன்று வினோத் பாம்னியா என்ற தலித் இளைஞனை அடித்துக் கொன்றார்கள். அம்பேத்கார் போஸ்டர் ஒட்டிய குற்றத்துக்காக அந்த தலித் இளைஞர் அடித்துக் கொல்லப் பட்டார்.இதை திருமாவளவன் கண்டித்தாரா? விசிக கண்டித்ததா? கண்டிக்க மாட்டார்கள்.தலித்துகளின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் எவ்வளவு நேர்மையற்றவர்களை நாம் காண்கிறோம்!!மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பார் யாம் கண்டது இல்.
என சமுக ஆர்வலர் இளங்கோ பிச்சாண்டி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.