ஸ்டாலினுக்கு ஏழரை துவங்கியாச்சு! திமுகவின் கதை இந்த தேர்தலோடு முடிந்துடும்: பகீர் சாபம் விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினையும்திமுகவையும் விரட்டி விரட்டி வெளுத்துள்ளது அதிமுக தரப்பு.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”திமுகவுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டதுகருணாநிதிக்கு கடன் பிரச்னை கழுத்தை நெரித்ததுகோபாலபுரம் வீடே அவரது கையை விட்டுப் போவது போலிருந்ததுஅவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர்நடித்து உதவினார்இதுதான் வரலாறுகடனிலிருந்து மீண்ட கருணாநிதியின் குடும்பம் இன்று மிக மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளதுஇது எப்படி சாத்தியமென்றால் எல்லாமே ஊழல் பணம்ஊழல் பணம்.

ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்திமுகவுக்கு ஏழரை  துவங்கிவிட்டதுஅதனால்தான் அவர் தொண்டாமுத்தூருக்கு வந்து வம்பிழுத்துள்ளார்திமுகவின் கதையை இந்த தேர்தலோடு மக்கள் முடித்துஅவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

இந்துக் கடவுள்களை பழித்துவிட்டுஇந்துக்களிடமே ஓட்டுக்களை வாங்குவதற்கு நாடகமாடி வருகிறது திமுகமக்கள் ஏமாந்துவிடக்குடாது.” என்று விளாசித் தள்ளினார்.

இதே கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியாவோ ”மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவதென்றால் அங்கே மக்கள்தானே இருக்க வேண்டும்அம்மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதுதானே ஸ்டாலினின் கடமைஆனால் தன் கட்சிக்காரர்களை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு மக்கள் கிராம சபைஎன்று அதை சொன்னால் எப்படி ஏற்க முடியும்?

கேள்விகேட்ட பெண்ணை அடித்து விரட்டியதன் மூலம் ஸ்டாலினின் தைரியம் புரிந்துவிட்டதுஇவரெல்லாம் முதல்வராகவே முடியாது என்று அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார்ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சிஆட்சியான திமுகவுக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.” என்று ஆவேசம் காட்டினார்.

ஆக  மொத்தமா சேர்ந்து முடிச்சுட்டாங்க!

Exit mobile version