முதல்வர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி தலைமை பதவியை மட்டுமே வைத்து இருப்பேன் தேர்தலுக்கு பிறகு கட்சி பதவிகள் கட்டுபடுத்தப்படும் என்று இல்லாத ஒரு கட்சி யை ப்பற்றி பேசும் ரஜினி அதுஎந்த கட்சின்னு கடைசி வரை வாய் திறக்கவே இல்லை.
இது தாங்க ரஜினியோட புத்திசாலித்தனம்
அந்த வலிமையான கட்சித்தலைமை பொறு ப்பை வகிப்பேன் என்பதை நன்கு யோசியு ங்கள்..அது நிச்சயமாகஅதிமுக தான். நான் மீண்டும் சொல்றேன்.ரஜினியை அதிமுகவு க்குள் பிஜேபி எப்படியாவது கொண்டு வந்து விடும்.
இதற்கான வாய்ப்புகள் சசிகலா ஜெயிலில்
இருந்து வெளி வந்த உடனே உருவாகலாம் சசிகலா ஜெயிலில் இருந்து வந்தவுடன் அதிமுகவில் உள்ள ஒரு கோஸ்டி அதிமுகவை
எப்படியாவது மறுபடியும் சசிகலாவின் பிடிக்கு ள் கொண்டு செல்ல முற்படுவார்கள்.
இன்னொரு கோஸ்டி இதை எதிர்ப்பார்கள். இதனால் உருவாகும் குழப்பத்தினால் அதிமுகவில் இருந்து முழுக்க சசிகலா ஆதரவு டீம் வெளியே போய்விடும்.வெளியேற்றப்படுவார் கள்.இந்த நேரத்தில் அதிமுகவில் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப அதிமுகவில் இருந்தே
அழைப்பு வைக்கப்படும்
அப்பொழுது ரஜினி அதிமுகவில் நுழைவார். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை ரஜினி கட்சிக்கு தலைமை ஆட்சிக்கு
ஒபிஎஸ் ஈபிஎஸ் மாதிரி ஒரு ஆள் இருப்பார். அதுவும் ரஜினியின் விருப்பம் தான்.
.ரஜினியின் மக்கள் மன்றங்கள் அதிமுகவில் ஐக்கியமாகும். பிஜேபிக்கு இப்பொழுது உள்ள அதிமுகவில் திருப்தி இல்லை. முழுஅளவிலான பிஜேபிக்கு கட்டுப்படும் அதிமுக உருவாக வேண்டும் என்றால் அது இப்பொ ழுது இருப்பவர்களில் சில பேர் வெளியேற வேண்டும்.
அதற்கு சசிகலா வெளியே வந்தால் தான் நடக்கும்.அதிமுகவில் உள்ள பிஜேபி எதிர்ப்பு ஆட்கள் சசிகலா பக்கமாக சென்றவுடன் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் முழு அளவில் பிஜேபி சார்ந்தே இருப்பார்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் கூட முழு அளவிளான பிஜேபி ஆதவாளர்களாகவே இருப்பார்கள்.
2021 ல் தமிழகத்தில் அதிமுகவுடன் பிஜேபி இணைந்து நடத்தும் கூட்டணி ஆட்சியின் மூலமாக தமிழக அரசியலில் ஆட்சியில் நிறை
ய மாற்றங்களை பிஜேபி ஏற்படுத்தும். இத ற்கு ரஜினி ஒரு கருவியாக இருப்பார்.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவெ னில் ரஜினி அதிமுக பிஜேபி கூட்டணியை எதிர்க்க சசிகலா அதிமுக காங்கிரசை திமுக
கூட்டணியில் இருந்து இழுத்து விடும். அவர்களோடு கமல் விஜயகாந்த் கட்சிகள் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு பக்கபலமாக உள்ள
பிஜேபி எதிர்ப்பு ஓட்டுகள் சிதைந்து விடும்.
ரஜினி அதிமுக பிஜேபி கூட்டணி இரட்டைஇலை சின்னத்துடன் பாமக துணையுடன் போட்டியிடுவதால் ரஜினி அதிமுக பிஜேபிகூட்டணி மிகப்பெரிய அளவில் திமுக கூட்ட ணியை வெற்றி பெற சசிகலா அதிமுக கூட்ட ணி துணை நிற்கும்.
ரஜினியை அதிமுகவில் நுழைத்து தமிழக அரசியலை மாற்ற பிஜேபி் செய்யும் திட்டங்கள் நிச்சயமாக இந்த ஆண்டு இறுதிக்குள்
வெளிச்சத்துக்கு வந்துவிடும். அதுவரை காத்திருப்போம். காத்திருங்கள் ரஜினி ரசிகர்களே..
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.