ரஜினியின் அரசியல் பாடம் ஆரம்பம்-

இன்றைக்கு ரஜினி மாவட்டதலைவர்களை
சந்திக்கிறார் என்றவுடன் கட்சி ஆரம்பம் கொடி ரெடி பிரச்சாரம் துவக்க ம் என்று கலர்கலராக கனவுகளுடன் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்ற ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் பேச்சைக் கேட்டு
இருக்கின்ற நாலு ஐந்து முடிகளையும் கலைத்து தலையை தடவியபடியே ஊர்போய் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் என்பது சாதாரண விசயம் அல்லbஎன்பது ரஜினிக்கு மிக நன்றாக தெரியும்.
அதை தன்னுடைய ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே ரஜினி தன்
னுடைய ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

அதிமுக திமுக இரண்டுகட்சிகளுக்கும் இப்பொழுதும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட சுமார்25 சதவீத வாக்காளர்கள் இருக்கிறார்கள்.இந்த மனநிலை மாற குறைந்தது இன்னும் 5 வருடங்களாவது தேவைப்படும்.
அதுவரை மாற்று அரசியலுக்கு வாய்ப்பேஇல்லை.

பிறகு திமுக அதிமுக கட்சிகள் மற்ற கட்சிக ளுடன் கூட்டணி சேரும் பொழுது 30-35 சதவீத த்தை எட்டிவிடும்.ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டால் 35 சதவீத வாக்
குகளை பெற முடிந்தால் அவரால் இந்த இரண்டு கட்சிகளை யும் நெருங்க முடியும்.

இந்த அளவிற்கு ரஜினி க்கு சக்தி இருக்கிற தா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற முடியும். 1996ல் ஒட்டுமொத்த மாக ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசியது .அதனால்
ரஜினியின் ஆதரவால் திமுக தமாக கூட்டணி வெற்றி பெற்றது போன்ற தோற்றம் உருவானது.

ஆனால் 1998 லோக்சபா தேர்தலில் அதே திமுக தமாகா கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார் ஆனால் திமுக கூட்டணியால்
பிஜேபியுடன் இருந்த அதிமுக பாமக கூட்டணியை தோற்கடிக்க முடியவில்லை.

1996ல் ரஜினியால் தோற்கடிக்க முடிந்த ஜெயலலிதாவை 1998 ல் தோற்கடிக்க முடியவில்லை.காரணம் கோவை குண்டுவெடிப்பின் காரணமாக மக்கள் திமுக கூட்டணி மீது கோபத்தில்இருந்தார்கள்.அதனால் ரஜினியின் ஆளுமைஅரசியலை மக்கள் ஓரங்கட்டி அப்பொழுது உருவான திடீர் இந்துத்வா உணர்வுக்கு ஆட்பட்டு அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள்.

அதே மாதிரி 2004 லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 6 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 5 பாண்டிச்சேரி 1 என்று 6 தொகுதி
களில் பாமகவை தோற்கடிக்க ரஜினி பகிங்கரமாக ரசிகர்களை களம் இறக்கினார்.ஆனால்
6 தொகுதிகளிலும் பாமக அமோக வெற்றிபெற்றது.

ரஜினியின் அரசியல் செல்வாக்கு முன் சாதா ரண சாதி கட்சியின் 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்கள்.இதில் இருந்து ரஜினி யின் அரசியல் மிகப்பெரிய அளவில் மக்களிடம்
தாக்கத்தை உருவாக்க வில்லை. என்றும் அவர்கள் தேர்தல் நேரத்தில் உருவாகும் கூட்ட ணி சார்ந்த அரசியலையே கருத்தில் கொள்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்து இப்பொ ழுது 15 வருசத்துக்கு மேலாச்சு.கருணாநிதி
ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகள் இல்லை. அதனால் ரஜினியின் ஆளுமை
வெற்றி பெறும் என்று ரஜினி ரசிகர்கள் கனவில் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு விசயத்தை ரஜினி ரசிகர்கள் கண்டு கொள்ள வில்லை.1998 ல் 2004 ல்
ரஜினி திரை உலகில் ஆளுமையோடு இருந்த காலத்திலேயே தேர்தல் அரசியலில் அவரு டைய ஆளுமை மக்களால் ஏற்றுக் கொள்ளபட
வில்வை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது திரை உலகிலேயே ரஜினிக்கு முழு ஆளுமை இல்லை. 20-35 வயது ரசிக ர்கள் விஜய் அஜித் என்று அவர்கள் பின்னால்
தான் நிற்கிறார்கள்.

அதனால் திரை ஆளுமை
யை வைத்து தமிழக அரசியலில் ரஜினியால் 35 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பது
முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்.

என்னைப்பொறுத்த வரை ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் அதிகபட்சமாக 10 சதவீத வா க்குகளை மட்டுமே பெற முடியும். இந்த 10 சதவீத வாக்குகளை பெற ரஜினி தமிழகமெ ங்கும் ஊர்ஊராக பிரச்சாரம்மேற்கொள்ள
வேண்டும். ரஜினிக்கு அந்த அளவிற்கு பொறுமையும் உடல் வலிமையும் இப்பொழுது
இல்லை.

இதனால் ரஜினியின் முழு அளவிலான பிரச்சாரம் இல்லாத நிலையில் இந்த 10 சதவீத வாக்குகளும் கேள்வி குறிதான்.அப்புறம்
எப்படி ரஜினி முதல்வராக முடியும் என்று கே ட்கிறீர்களா..முடியும். அந்த ஆண்டவனால் முடியும். ரஜினி அடிக்கடி அந்த ஆண்டவனே நம்ம பக்கம் என்று சொல்வது போல இந்தியாவை ஆண்டவன் இப்பொழுதும் ஆளுகின்ற
மோடிக்கு ரஜினி மீது மிகப்பெரிய அளவில் மரியாதை பாசம் இருக்கிறது.

அதனால் எப்படியாவது ரஜினி க்கு தமிழக அரசியலில் உரிய அங்கீகாரம் அளித்து அதன்
மூலம் தமிழகத்தில் பிஜேபியை வளர வைக்க நினைக்கிறார் மோடி. அதனால் ரஜினியை முன்னிறுத்தி 2021 சட்டமன்ற தேர்தலை பிஜேபி அதிமுக பாமக இன்னும் சில கட்சி
கள் சந்திக்கும்.

ரஜினியும் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் ஓட்டுகள் பிரிந்து திமுக வெற்றி பெற வழி வகுக்கும் என்று வெளிப்படையாகவே
அறிவித்து பிஜேபி அதிமுக பாமக கூட்டணி யோடு தேர்தலை சந்திப்பார்.

இந்த தேர்தலில் ரஜினி அதிமுக பிஜேபி கூட்டணி சுமார் 45 சதவீத வாக்குகளை பெற்று
ஆட்சி அமைக்கும். ரஜினி முதல்வராக வருவாரா இல்லையா என்பது ரஜினியின் அப்போதைய மனநிலையை பொறுத்தது.
நான் மீண்டும் மீண்டும் மீண்டும் கூறும் ஒரே விசயம் என்னவென்றால் ரஜினிக்கு முதல்வர் ஆசை என்றுமே கிடையாது.

1996 மாதிரி தமிழக அரசியலில் மாற்றம் கொ ண்டு வர விரும்புகிறார் தட்ஸ் ஆல் 1996 க்கு
பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் 1996-2001 ஆட்சிதான் திமுகவின் மிகச்சிறந்த ஆட்சி என்பதைதமிழக மக்கள் மட்டுமல்ல அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் அனைவரும் அறிவார்கள்.

அப்பொழது ஊழல் அராஜக அரசியலில் இரு ந்து தமிழகம் விடுபட்டது மாதிரி 2021ல் ஒரு
தேசிய ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிவிட்டு தமிழக அரசியலை தேசியம் சார்ந்து
திருப்பும் வேலையை மட்டுமே ரஜினி செய்ய இருக்கிறார்.

ரஜினி சிஏஏவை ஆதரிக்க
வேண்டிய அவசியம் இல்லை அதிமுக சிஏஏ வை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஏன் பாமக கூட சிஏஏவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இவர்கள் அனைவரும் பிஜேபி அரசு கொண்டு வந்த சிஏஏவை தமிழகத்தில் ஆதரி
த்து நிற்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர்களை வைத்தே தமிழகத்தில்
பிஜேபி ஒரு தேசிய கூட்டணி ஆட்சியை 2021 ல் அமைக்க இருக்கிறது என்பதே காரணமாகும்..

இதை தன்னுடைய ரசிகர்களுக்கு பாடம் எடுக்கவே அவர்களை அழைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

Exit mobile version