பல கட்ட போராட்டங்களை தாண்டி ராம ஜென்ம பூமியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அயோத்தி ராமர் கோயில் கடந்த 22ஆம் தேதி குடமுழுக்குடன் திறக்கப்பட்டது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். ஏராளமான திரைபிரபலங்கள், சாதுக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தினமும் லட்சக்கனனான பக்தர்கள் தற்போது ராமரை தரிசித்து வருகிறார்கள்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை ரேவதி பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவானது வைரலாகி உள்ளது. நடிகை ரேவதி.தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில்
இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.
ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார்.
இந்த சமூகவலைத்தள பதிவிற்கு பலபேர் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். கனல் கண்ணன்சகோதரி நடிகை ரேவதி போல் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நாம் அனைவரும் இந்து என்ற உணர்வு வரவேண்டும் 🙏🏻🙏🏻 ஜெய் ஸ்ரீ ராம் மேலும் மின்னும் ரேவதி நட்சத்திரம் எனதனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.