இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து நமது பழங்கால சின்னங்களை திருடி சென்றனர். இது போல் தான் நமது கோவில்கள் உள்ள கடவுள் திருவுருவ சிலைகளை திருடி சென்று அவர்களின் அருகங்ச்சியங்களை அலங்கரித்து வந்தார்கள். இதற்கு இந்தியாவில் இருக்கும் கருப்பு ஆடுகளும் தான் காரணம். 37ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிவன் கோயிலில் திருடு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு.700 ஆண்டுகள் பழமையான சிலை மீட்கப்பட்டுள்ளது.இதுபோல் பல சிலைகள் மீட்கப்பட்டு வந்தது. இதற்கு மூல காரணம் இந்து அறநிலைய துறை கண்ணில் விரல் விட்டு ஆட்டிய நமது பொன்.மாணிக்க வேல் ஆவர்.
இந்த நிலையில். சிங்கப்பூரில் இருக்கும் விஜயகுமார் என்பவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். விஜய குமார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவர். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்கதமிழக அரசிற்கும் காவல்துறைக்கும் உதவி செய்து வருகிறார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வியாபாரி ஒருவர் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் கடவுள் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அந்த புகைப்படங்களை ஆராய்ந்த விஜயகுமார் தமிழக கோவில்களில் இருந்து இந்த கடவுள் சிலைகள் திருடப்பட்டது என விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.
அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கருங்காலிகள் கடவுள் சிலைகளை திருடி விற்கும் கும்பலுடன் இணைந்து பராமரிக்கப்படாத கோவில்களில் உள்ள சிலைகளை திருடி விற்பது சகஜமாகி விட்டது. இதில் அரசு ஊழியர்கள் தொடர்பு உள்ளது என்பதை முன்னாள் சிலை கடத்தல் தடுப்புபிரிவு பொன். மாணிக்கவேல் உறுதிபடுத்தினார். அவரை வேலை செய்யவிடாமல் தடுத்தது தமிழக அரசு. எல்லாவற்றையும் தாண்டி பல சிலைகளை பலநடுகளிலிருந்து சிலைகளை மீட்டவர் தான் பொன்.மாணிக்க வேல் மேலும் அறநிலைய துறை கோவில் நிலங்களை பட்டா போட்டு விற்கவும் முடிவு செய்துள்ளது. என்ற தகவல்கள் கசிந்துள்ளது. இந்துக்களின் நிலங்கள் கோவில்கள் அதில் உள்ள சிலைகள் அனைத்தையும் விற்கவும் திருடவும் தான் அரசு ஊழியர்கள் இருக்கிறார்க்ளோ என்ற அச்சம் மக்களிடையே தோன்றியுள்ளது
பொன் மாணிக்கவேல் போன்ற தைரியமிக்க ஒரு அதிகாரி மீண்டும் தமிழகத்தில் வர வேண்டும் தமிழகத்தின் புராதன சின்னங்களை மீட்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கனவு. எல்லாம் கடவுளின் செயல்! மீட்கப்படுமா என்று!