ராமர் கோவில் கட்டுமான பணி சுமார் 500 ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிற்பகுதியில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பால் இது சாத்தியமானது.
“நடந்த விஷயங்கள், கடந்த கால விஷயங்கள்” என்று முஸ்லீம் தரப்பு வழக்குரைஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறினார். எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது ராமரின் விருப்பம் என்று தான் நான் நினைக்கிறேன், நான் அதில் கலந்து கொள்ளப் போகிறேன்.” என்று அவர் கூறினார்
இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட மற்றொரு முஸ்லீம் முகமது ஷெரீப், தனக்கும் அழைப்பு வந்திருப்பதாகவும், அதில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புது தில்லிக்கு தென்கிழக்கே சுமார் 427 மைல் தொலைவில் அமைந்துள்ள அயோத்தியில் விழாவிற்கு முன்னதாக வேத மந்திர கோஷங்கள் எதிரொலித்து கொண்டிருந்தன.சமூக இடைவெளியை பராமரிக்க பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
800கிலோமீட்டர் நடக்கும் முஸ்லீம் ராமபக்தர்
இதை தவிர முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பலர் ராம் பக்தர்களாக இருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது.சத்தீஸ்கரின் சந்த்குரியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர். 800 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இந்த பூமி பூஜையில் கலந்து கொள்கிறார்.
சந்த்குரி ராமரின் தாயான கவுசல்யை பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் இந்த இடத்திலிருந்து மண்ணை எடுத்து செல்கிறார்.
“நான் மதத்தினால் ஒரு முஸ்லீம், ஆனால் நான் ராமரின் பக்தன். நம் முன்னோர்களைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் இந்துக்கள். அவர்களின் பெயர்கள் ராம்லால் அல்லது ஷியாம்லால் என இருக்கலாம். நாம் அனைவரும் தேவாலயத்திற்குச் சென்றாலும் மசூதிக்குச் சென்றாலும் நாம் அனைவருக்கும் இந்து வம்சாவளி வந்தவர்கள் தான் ” என்கிறார்.
இன்னும், இந்த அடிக்கல் நாட்டு விழாவில் 135 துறவிகள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பூசாரிகள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.