“ராமர் கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” பிரதமர் மோடி பெருமிதம்!

இந்துக்களின் 500 ஆண்டு போராட்டமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது . ராமர் கோயில் கட்டுமானத்தின் அடையாளமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் அயோத்தியில் 40 கிலோ வெள்ளி செங்கல்லைப் பதித்தார்.

நிகச்சியில் பேசிய பிரதமர் மோடி

“என்னை ராம ஜன்மபூமி அறக்கட்டளை இந்த நிகழ்வுக்கு அழைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். இந்த வரலாற்று தருணத்திற்கு சாட்சியாக எனக்கு ஒரு வாய்ப்பை அறக்கட்டளை  வழங்கியது.” என்று கூறியுள்ளார்.


“இன்று ராமர் கோயில் கட்டுமானம் ஒரு வரலாற்று தருணத்தை மட்டும் குறிக்கவில்லை. வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை குறிக்கின்றது.”

“நீதியை நேசிக்கும் நாடான இந்தியாவுக்கு உண்மை, அகிம்சை, நம்பிக்கை மற்றும் தியாகம் ஆகியவற்றின் தனித்துவமான பரிசுதான் இந்நாள். கோடிக்கணக்கான ராம பக்தர்களின் தீர்மானத்திற்கு ஒரு சான்றாக இந்நாள் உள்ளது.”

“கோயில் கட்டுமானம் அயோத்திக்கு அழகை மட்டும் சேர்க்காது, இது அப்பகுதியின் முகத்தையும் மாற்றிவிடும், மேலும் பல வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் ராமர் மற்றும் சீதையின் தரிசனத்திற்காக இங்கு வருவார்கள்.”

“இந்த ராமர் கோயில் நம் பாரம்பரியத்தின் அடையாளமாக மாறும், நம்முடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறும். இது கோடிக்கணக்கான இந்து மக்களின் அடையாளமாகவும் மாறும்.” என பிரதமர் மோடி தனது உரையில் நாட்டுமக்களுக்கு கூறியுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version