வலதுசாரி பத்திரிக்கையாளர் என்று அவரிடம் இருந்து விருதுவாங்க மறுத்த கொள்கை நல்லக்கண்ணு

ரங்கராஜ் பாண்டே ஒரு வலதுசாரி பத்திரிக்கையாளர் என்று அவரிடம் இருந்து விருதுவாங்க மறுத்த கொள்கை கோமான் நல்லக்கண்ணுஅவர்களே..அதிமுக பிஜேபி கூட்ட ணில் உள்ள ஒரு கட்சி.

பிஜேபியின் சித்தாந்தங்களை செயல்படுத்தி வரும் கட்சி என்று கம்யூனிஸ்ட் கட்சிகளே தொடர்ந்து கூறி வருகின்றன.

இப்படி தொடர்ந்து பிஜேபியின் சித்தாந்தங்க ளை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் அதி முக ஆட்சி அளித்த வீட்டை வேண்டாம் என்று நீங்கள் கூறி இருந்தால் நீங்கள் கொள்கை யை பற்றி பேசலாம்.

ஆனால் வீடு என்றவுடன் கொள்கைகளை
ஒதுக்கி வைத்து விட்டு வீட்டை வாங்கி குடி யேறி விட்டு இப்பொழுது சாதாரண விருது என்றவுடன் கொள்கையை பற்றி பேசுவது முதுபெரும் அரசிய ல்வாதியான உங்களுக்கு நல்லவா இருக்குது?

ரங்கராஜ் பாண்டே ஒரு வலதுசாரி சிந்தனையாளர் வலது சாரி கருத்துக்களை மட்டுமே அவரால் பரப்ப முடியும்.

ஆனால் அதிமுக பிஜேபியின் செயல் திட்டங்களை செயல்படு த்தி வரும் ஒரு வலதுசாரி அரசு.

இந்த இரண்டில் எதை உங்களை மாதிரியான இடது சாரிகளால் டேஞ்சர் என்று கூற முடியும்? சிந்தனையா இல்லை ஆட்சியா?

200 ரூபாய்க்கு தேறாத விருதை வழங்கும் சிந்த னையாளரை புறக்கணித்து விட்டு 20 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள வீட்டை வலதுசாரி ஆட்சி யிடம் இருந்து இலவசமாக வாங்கிய நீங்கள் எப்படி நான் ஒரு கொள்கைவாதி என்று கூறமுடியும்?

Exit mobile version