ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர்) இதை பற்றி பேசி வந்திருந்தாலும், இம்முறை நிதி அமைச்சரே அந்த விவகாரம் பற்றி பேசியிருப்பதால் மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாகவே டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்ள்.
சர்வதேச சந்தையில் கச்சா விலையும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இனி டீசல் பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருக்க வாய்ப்பு. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர, ஜிஎஸ்டி குழுவின் 75% அனுமதி பெற வேண்டும் டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராததற்கு காரணம் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த வரிகளில் பெரும் பகுதி மாநிலங்களுக்கே சென்றாலும், ஆர். எஸ் பாரதி ஊடகங்கள் மத்திய அரசையே குற்றம் சாட்டி வந்தன. ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், இனி எவரும் மத்திய அரசின் மீது பழி போட இயலாது.
மத்திய அரசுக்கு கிடைத்த வரியிலிருந்து கிட்டத்தட்ட ரூ 15 லட்சம் கோடி உள்நாட்டு கட்டுமானத்தில் செலவிட்டுள்ளது. அவை இப்போது தேசிய சொத்துகள்.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான 45வது கவுன்சில் கூட்டம் 20 மாதங்களுக்கு பின் முதல்முறையாக நேற்று நேரடியாக கூடியது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நேற்று நடந்த நேரடி கவுன்சில் கூட்டத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் தமிழகம் கேரளா தெலுங்கானா ராஜஸ்தான் சட்டிஸ்கர் மேற்குவங்களாம் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் அல்லாமல் உயிர் காக்கும் சில விலை உயர்ந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் : மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது.இதையும் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. என தெரிவித்துள்ளார்.
அனைத்திற்கும் மத்திய அரசு மேல் குற்றம் சுமத்தி வந்த விடியல் அரசு தற்போது பெட்ரோல் டீசல் விலை ஜி.எஸ்.டி யில் கொண்டு வருவதற்கு விடியல் அரசு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டுமானால் இனி மாநில அரசினை நாம் கேட்கவேண்டியது தான்.