கேரளாவில் சமூக ஆர்வலர் என்கின்ற போலி சாயலில் சுற்றிவரும் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும் சர்ச்சை வீடியோ தொடர்பான வழக்கில் தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நபர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து வளரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் என கேள்வி எழுப்பினர்.
இது ஆபாசத்தை பரப்பும் செயல். நீங்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?
நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம், ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்?
ஆபாசத்தையே நீங்கள் பரப்புகிறீர்கள். இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2018 செப்டம்பரில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, ரெஹானா பாத்திமா சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கேரளாவில் சமூக ஆர்வலர் என்கின்ற போலி சாயலில் சுற்றிவரும் ரெஹானா பாத்திமா செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.