திருவெண்ணைநல்லூர் அருகே வெள்ள பாதிப்பின் போது சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பேரங்கியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட நபர்களை மீட்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அப்போது எப்படி தன்னைத் தானே காப்பாற்றுக் கொள்வது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொண்டவர்களை கயிறு மூலமாகவும், மீட்கும் காட்சிகள் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது.

அதேபோல தண்ணீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்று இருந்தது.

Exit mobile version