தீபாவளி நாளன்று மத்திய அரசு தடாலடியான ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து தடாலடி அறிவிப்பினை வெளியிட்டது.இது பொது மக்களிடேயே பெரும் வரவேற்பினை பெற்றது.
மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை 12 ரூபாய்க்கு மேல் குறைந்தது. டீசல் விலை 20 ரூபாய் அளவு குறைந்தது இது வரலாற்றில் இல்லாத ஒன்று.
இதை தமிழக மக்களிடம் மறைப்பதற்கு தமிழக ஊடங்கங்கள் கேஸ் விலையினை கையில் எடுத்தது. ஹோட்டல்களுக்கு விற்கப்படும் கேஸ் விலை உயர்வை பற்றி ஒரு உணவாக உரிமையாளரிடம் மைக்கை நீட்டினார் தனியார் ஊடக நிருபர். அவர் மத்திய அரசினை குறைசொல்வார் என்ற நினைப்பில் பேட்டி எடுத்த நிருபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் உணவாக உரிமையாளோரோ உண்மையை புட்டு புட்டு வைத்தார்.
உணவாக உரிமையாளர் பேசும்போது கேஸ் விலை உயர்வு என்பது பெரிது ஒன்றும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு கேஸ் வங்கியுள்ளோம் 7 வருடம் கழித்து தற்போது தான் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் 1200 ரூபாய்க்கும் கேஸ் வங்கியுள்ளோம். மேலும் உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் மத்திய மோடி அரசு இலவசமாக 100 கோடி தடுப்பூசி போட்டுள்ளது.
இதற்கு பணம் எங்கிருந்து வரும். நாம் தான் கொடுக்கவேண்டும். வீறு யார் தருவார்கள். எனும் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்க நம் நாடு 100 கோடி தடுப்பூசி போட்டுள்ளது, நிருபர் பெட்ரோல் டீசல் விலைக்கு உயர்வு பற்பற்றி கேட்டார்.அதற்கு அவர் மத்திய நிதி அமைச்சர் பெட்ரோல் டீசல் விலையினை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தயாராக உள்ளது என கூறினார். தமிழக அரசோ அதற்கு சம்மதிக்கவில்லை ஏன்? மத்திய அரசு குறைந்த விலைக்கு தான் மாநிலங்களுக்கு பெட்ரோல் டீசல் தருகிறது மாநில அரசு தான் கூடுதல் வரி போட்டு 100 ரூபாய்க்கு விற்கிறது. என கேள்விக்கணைகளை தொடுத்தார். நிருபர் என்ன செய்வேதென்று புரியாமல் நின்றிருந்தார்.
அதோடு நிற்காமல் டாஸ்மாக் துறையில் தினம் லாபம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விடவேண்டும். வாங்கும் விலை எவ்வளவு விற்கும் விலை எவ்வளவு தினம் தோறும் விற்கும் மதுபானங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என சம்பவம் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை GST மதிப்பிற்குள் கொண்டுவந்தால் நிச்சயம் விலை குறையும் என்பது சமணியர்களிடம் பதிந்து விட்டது. இதை விடியல் அரசு எவ்வாறு கையாளாக போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது