டாக்டர் பாவேந்தர் அவர்களின் 86வது பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வள்ளலார் மடத்திற்கு அன்னதானம் வழங்க,பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகளை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட ஐஜேகே தலைவர் பொன்முடி ஏற்பாட்டில்
பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில பொருளாளர், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் வழங்கினார்.
உடன் இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் குருமூர்த்தி ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
