நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 20 பேர் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு வேன் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த வேன் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில்,கள்ளக்குறிச்சி மாவட்டம்,
ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தியாகதுருகம் – திருவண்ணாமலை சாலையில் பாவந்தூர் அருகே வளைவான சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியோடு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்குச் சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
